Siva -Oneindia Tamil
: சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: ஏஏஏ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்- வீடியோ
சென்னை: சிம்புவால் வீடு, வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன் என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார்.
இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் கூறியதாவது,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஸ்க்ரிப்ட்டை முழுமையாக கேட்ட பிறகே நடிக்க சம்மத்தித்தார் சிம்பு. ஒழுங்காக டேட்ஸும் கொடுக்கவில்லை, படப்பிடிப்புக்கும் வரவில்லை.
கதைப்படி படத்தையும் முறையாக எடுக்கவிடாமல் தொல்லை கொடுத்தார். படத்தின் பாதி வேலைகள் முடிந்த நிலையில் இதை இரண்டு பாகமாக எடுக்குமாறு கூறினார் சிம்பு.
2ம் பாகத்தில் சம்பளம் வாங்காமல் சும்மா நடிக்கிறேன். எது நடந்தாலும் நான் பொறுப்பு என்று சிம்பு கூறினார். முதல் பாகத்திற்கு அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தோம்.
படம் தோல்வி அடைந்ததால் எனக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. பட விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இதற்கு சிம்பு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரால் வீடு, வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஒரு மாதம் ஆகியும் இன்னும் எதுவும் செய்யவில்லை. சிம்புவிடம் இருந்து எனக்கு நஷ்ட ஈடு வாங்கித் தர வேண்டும் என்றார் ராயப்பன்<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக