செவ்வாய், 28 நவம்பர், 2017

Ivanka ட்ரம்ப் தெலுங்கான வருகை ! மோடிக்கு பாராட்டு ,,, பாதுகாப்பு கெடுபிடி .. பிச்சைக்காரர்கள் சிறை பிடிப்பு


Shyamsundar - Oneindia Tamil ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். ஹைதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். மேலும் பிரதமர் மோடியுடன் மத்திய உணவும் சாப்பிட்டார். ஹைதாராபாத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் அவர் இந்தியா குறித்தும் மோடி குறித்தும் உரையாற்றினார். மோடியுடன் சந்திப்பு ஹைதராபாத்தில் தற்போது சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்து வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த மாநாடு நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இன்று காலை அவர் ஹைதராபாத்தில் விழா நடக்கும் இடத்தை அடைந்தார். காலை பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் மதிய விருந்து சாப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: