

இதையடுத்து மந்திரிகளும் அவருக்கு பதில் சொன்னார்கள். இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது உறுதி என அறிவித்தார். கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி ஆளம் காண விரும்புகிறார். அந்த வேட்பாளர் பிரபலமானவராக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார். அப்போது அவருக்கு கண்ணில் பட்டவர் நடிகர் விஷால். நடிகர் சங்க தேர்தலிலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால். தொடர்ந்து அவரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பிரபலமானவர், சினிமா கதாநாயகன் என்பதால் அவரை களத்தில் இறக்க கமல்ஹாசன் முயற்சி செய்கிறார். விஷாலிடம் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாக தெரிகிறது. விஷாலுக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு. தனிக்கட்சி ஆரம்பிக்கலாமா என நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்கள், உடனடியாக அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட வேண்டாம். ஏதாவது ஒரு கட்சியில் சேரலாம் என்று சொல்லியுள்ளானர். டிடிவி தினகரன் தரப்பிலும் விஷாலை அரசியலுக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் கமல் தரப்பில் இருந்தும் அழைப்பு வந்ததோடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவும் கேட்டு வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக