நக்கீரன் :ட்விட்டர், முகநூல் பதிவுகள் மூலமாக நமது உள்கட்சி சண்டை வெளிப்படுகிறது" என்றார். இதைக் கேட்ட மைத்ரேயன், "நான் அம்மாவின் விசுவாசி. எது பேசினாலும் நேரடியாக பேசுங்கள்" என்றார். அதற்கு பதில் சொன்ன பொள்ளாச்சி ஜெயராமன், "நீங்கள் விசுவாசின்னா நாங்க விஷவாசியா?" என பதில் சொல்ல, ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் எம்.பி. செஞ்சி ஏழுமலையையும் பேச தூண்டி விட்டார். அவர்கள் மைத்ரேயனை ஒருமையில் பேச ஆரம்பித்தார்கள்.
"நீ பி.ஜே.பி.க்காரன்தானே நான் சொல்லவா உன் கதையை, நீ பச்ச துரோகி" என மைத்ரேயனையும் பா.ஜ.க.வையும் சகட்டு மேனிக்கு வாங்கினர். இவர்களுடன் அமைச்சர் கே.சி.வீரமணியும் சேர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட 50 பேர் சத்தமாக சண்டையிடும் சப்தம் வெளியில் அமர்ந்திருந்த தொண்டர்கள் காதில் விழுந்தது. மைத்ரேயனுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி பேச முற்பட்டபோது அவருக்கும் அர்ச்சனை விழுந்தது. ஒரு கட்டத்தில் நாற்காலிகள் நகர ஆரம்பித்ததும் மைத்ரேயன் கையிலிருந்த மைக்கை ஓ.பி.எஸ். வாங்கிக் கொண்டார்.
இப்படி களேபரத்துடன் நடந்து கொண்டிருந்த விழாவை அமைதிப்படுத்தி ஆட்சி மன்றக் குழுவில் ஓ.பி.எஸ். சார்பாக கே.பி.முனுசாமியும், இ.பி.எஸ். அணி சார்பாக இ.பி.எஸ்.சும், வைத்திலிங்கமும் அறிவிக்கப்பட்டனர்
தினமலர் :சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஏற்கனவே பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.,வின் அவைத் தலைவருமான மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவார் என, கட்சியின் ஆட்சி மன்ற குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு எதிராக கிளம்பிய அ.தி.மு.க., அமைச்சர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள், தேர்தலில் உள்ளடி வேலை பார்க்கக் கூடும் என்பதால், அவர்களை தனித்தனியே அழைத்து, முதல்வர் பழனிச்சாமி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆர்.கே.நகரில், ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அ.தி.மு.க.,வின் புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் போட்டியிட்டவர் மதுசூதனன். அவர், அ.தி.மு.க.,வின் அம்மா அணி வேட்பாளர் தினகரனை மட்டுமல்ல, கட்சியின் பெரும் தலைகளாக இருக்கும் முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களையும்; அவர்களது ஊழல்களையும் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், பழனிச்சாமி-பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து விட்டதால், மீண்டும் மதுசூதனனையே அ.தி.மு.க.,வின் வேட்பாளர் ஆக்கினால், மக்கள் அதிருப்தி கொள்வர். அதாவது, எட்டு மாதங்களுக்கு முன், மதுசூதனனை கடுமையாக விமர்சித்த பழனிச்சாமி தரப்பினர், இப்போது, அவருக்காக ஓட்டு கேட்டு வருகின்றனரே என்று எரிச்சல் கொள்வர். அதனால், அவரை தவிர்த்து பன்னீர்செல்வம் தரப்பிலேயே கூட வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று, மதுசூதனனுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் சொல்லி வந்தனர்.அதை முதல்வர் பழனிச்சாமி ஏற்கவில்லை. ஒரு கட்சியையும், அக்கட்சி தலைமையையும் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கிறோம். அடுத்த சில நாட்களிலேயே அக்கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்கிறோம். ஓட்டு கேட்கிறோம். மக்கள், அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல்தான் ஓட்டளிக்கின்றனர். அதனால், வேட்பாளர் குறித்தெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை.
இன்று அணிகள் இணைந்ததால் மாற்றி பேசுகிறோம் என்பதெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். அதையும் தாண்டி, இதையெல்லாம் கணக்கிட்டு, மக்கள் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை. அதனால், இம்முறையும் மதுசூதனனே போட்டி இடட்டும். கட்சிக்கு வெற்றியும் கிட்டும். கட்சிக்குள் நிலவும் குழப்பமும் அகலும் என்று சொல்லியே, மதுசூதனனையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார் முதல்வர் பழனிச்சாமி. அதன் பின் தான், மதுசூதனன் வேட்பாளர் ஆக்கப்பட்டார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக