சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸின் அலுவலகம் மற்றும் உரிமையாளரின் இல்லம் என்று மொத்தம் 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்படுள்ளனர். ஏற்கனவே சசிகலாவின் குடும்பத்தினரிடம் நடைபெற்ற சோதனையில் மிக முக்கியமானதாக ஜாஸ் சினிமாஸ் கருதப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜாஸ் சினிமாஸை சத்யம் சினிமாஸிடம் இருந்து விவேக் வாங்கியுள்ளார். தற்போது அவர் அதனை லீசுக்கு வாங்கியதாக கூறியுள்ளார். இது தொடர்பான விளக்கத்தை சத்யம் சினிமாஸிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கான ஆவணத்தை சத்யம் சினிமாஸ் தாக்கல் செய்யவில்லை என்றும் போதுமான ஆவணங்கள் இல்லாதால் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஜாஸ் சினிமாஸில் 5 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதில் மிக முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜாஸ் சினிமாஸ் வாங்கியதற்கான மூலதனம் எங்கிருந்து பெறப்பட்டது தொடர்பாக அவர்கள் சரியான தகவல்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிகாரிகள் சத்யம் சினிமாஸூக்கு சொந்தமான 33 இடங்களில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணியளவில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக