திங்கள், 27 நவம்பர், 2017

இமாச்சல் .. 21 வயது பெண்ணை 56 வயது இராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரம்

the victim stated the 56-year old Colonel drugged and molested her on Monday night at a house in Longwood, a Shimla suburb. SSP Shimla Somya Sambshivan said an FIR has been registered and the accused was arrested from the house where the crime took place. "The girl was under shock and could not divulge much,"
மாலைமலர் :இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் மாடலிங் வாய்ப்புக்கு உதவுவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கற்பழித்த 56 வயது ராணுவ உயரதிகாரியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ கர்னல் சிறையில் அடைப்பு சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வரும் அதிகாரியின் 21 வயது மகள் மாடலிங் துறையில் நுழைவதற்காக வாய்ப்பு தேடி வந்துள்ளார். அவருக்கு உதவுவதாக அந்தப் பெண்ணின் தந்தையுடன் பணியாற்றும் ராணுவ கர்னல் பரம்ஜீத் சிங்(56) தெரிவித்துள்ளார். கடந்த 21-ம் தேதி சிம்லா நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி மது குடிக்க வைத்த கர்னல் பரம்ஜீத் சிங், தனது மகளை கற்பழித்து விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்


கடந்த 22-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் கர்னல் பரம்ஜீத் சிங் ஆகியோரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் கர்னல் பரம்ஜீத் சிங்-கை கைது செய்த போலீசார் அவரிடம் கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று சிம்லா மாவட்ட நீதிமன்றத்தில் கர்னல் பரம்ஜீத் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி கனிகா குப்தா உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: