சனி, 23 ஜூலை, 2016

திருவள்ளுவர் புனித தோமையர்.. ST.Thomas திருக்குறள் இயேசுவின் பொன்மொழிகள்.. கபாலியை மிஞ்சிய பருப்புடா

கேள்வி :- திருவள்ளுவர் ஒடுக்கப்பட்ட சமூகத்ததை சேர்ந்தவர் என்பதால் அவரின் சிலையை கங்கைக்கரையில் வைக்கக்கூடாது என்று இந்து சாதுக்கள் கலவரம் செய்கின்றனரே? பதில் :- திருவள்ளுவர் ஒடுக்கப்பட்டவர் இல்லை. யூதரும் இயேசு கிறிஸ்துதுவின் சீடருமான புனித தோமையார் (தாமஸ்) தான் திருவள்ளுவர். தமிழகத்தில் வள்ளுவராக மாறி கிறிஸ்துவின் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு திருக்குறள் எழுதினார் என்ற ஒரு குறிப்பு சமூக ஊடகங்களில் சில நாட்களாக உலவி வருகிறது. திருக்குறள் யூதநூல் என்று சாதுகளுக்கு தெரிந்தால் ஒருவேளை கலவரம் அடக்கப்படலாம். படிக்க சுவாரசியமாக இருப்பதால் இதோ நான் வாசித்த அந்த குறிப்பு இங்கே.


;புனித தோமையார் என்கிற திருவள்ளுவர் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவு. உன்னதமான நூலை எழுதிய திருவள்ளுவரது வாழ்க்கை மர்மமாகவே உள்ளது. ஆனால் தற்போது கிடைக்கும் தகவல் வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடராகிய தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார் தான் திருவள்ளுவர் எனும் தகவல் தான் அது. இதற்கு சான்றாக பின்வரும் தகவல்களை தருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தோமையாராகிய திருவள்ளுவர் பண்டைய இஸ்ரேல் நாட்டில் கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் பிறந்தார். (திருவள்ளுவருக்கு முன் பிறந்த புலவர்களின் பிறப்பிடங்கள் எல்லாம் அறியப்படும் போது ஏன் திருவள்ளுவரது பிறப்பிடம் மட்டும் அறியப்படவில்லை? ஏனென்றால் அது தமிழத்தில் இல்லை).
இயேசுவின் பிரதான சீடராகிய இவர் அவரது உபதேசங்களை சுருக்கமாக குறிப்பெடுப்பதில் வல்லவர் என வரலாற்றின் மூலம் அறிகிறோம். இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு புனித தோமையார் தமிழகத்தின் மயிலாப்பூர்க்கு வருகிறார். நாம் திருவள்ளுர் வசித்ததாக சொல்கின்ற மயிலாப்பூர். அங்கு வாசுகி எனும் தமிழ் பெண்ணை மணந்து தமிழ் கற்று தேர்கிறார். இஸ்ரேலிய நாட்டில் நெசவுத் தொழில் செய்யும் பாரம்பரியத்தில் பிறந்த தோமையார் என்கிற திருவள்ளுவர் தமிழகத்திலும் நெசவுத் தொழிலை செய்கிறார். அழகுத் தமிழில் இயேசு பிரானின் உபதேசங்களை தொகுக்க ஆரம்பிக்கிறார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என ஆதாம் ஏவாளில் உலகம் தொடங்கியதை எழுதி வரிசையாக இயேசுவின் உபதேசங்களை எழுதுகிறார். அகிம்சை, பிற உயிர்களுக்கு துன்பம் தராமை, மன்னிக்கும் குணம், அரசனின் கடமை, இல்லறம், கர்த்தரின் தாள் பற்றும் சரணாகதி தத்துவம் என அனைத்தையும் எழுதுகிறார். தற்போதைய புனித தோமையார் மலையில் தமிழறிஞர்கள் சூழ அரங்கேற்றப்படுகிறது. தமிழின் முதல் கிறித்துவ இலக்கியம் படைக்கப்பட்டது இவ்வாறு தான். தோமையாரை மிகவும் மதித்த தமிழ் மக்கள் அவர் இறப்பிற்கு பின் கட்டிய கோவில் தான் தற்போதைய சாந்தோம் சர்ச். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தமது மதத்திற்குள் இழுத்த இந்துத்துவம் தற்போது திருவள்ளுவராகிய தோமையாருக்கு பூனூல் ஆணிவித்து அழகு பார்க்கிறது. (புனித தோமையார் தான் திருவள்ளுவர் என தெரிந்த வடஇந்திய காவிகள் எதிர்ப்பு தெரிவித்தது வேறு விஷயம்)
உண்மையை மூடி மறைக்கலாம் அழிக்க முடியாது என்பது வரலாறு நமக்கு கற்றுத் தரும் படும் பாடம். தோமையாராகிய திருவள்ளுவரது விஷயத்திலும் அது நடக்கும் என நம்புகிறோம்.
----000-----   முகநூல் உபயம் கிளிமூக்கு அரக்கன்<

கருத்துகள் இல்லை: