செவ்வாய், 19 ஜூலை, 2016

ஜெர்மன்..ஆப்கன் isis பயங்கரவாதி (17) சுட்டுக்கொலை. பொதுமக்களை கோடாரியால் தாக்கினான்

ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மனியில் தாக்குதல் நடந்த இடத்தில் அவசரச் சேவை வாகனங்கள் இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும் ஒரு கத்தியால் பயணிகளைத் தாக்கியதாகவும், அவரால் தாக்கப்பட்டவர்களில் நால்வர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோயாச்சிம் ஹெர்மன் இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று இது வரை தெரியவில்லை என்றார். பிரான்ஸில் நடந்ததைப் போல இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்று கணிசமான பயங்கள் ஜெர்மனியில் நிலவுவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்; bbc.com

கருத்துகள் இல்லை: