முன்னாள்
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான சுமார், நாற்பது
இடங்களில் வருமானவரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தியுள்ளனர். இன்று
காலை சோதனையை முடித்திருக்கும்வேளையில் இதுகுறித்து சில சந்தேகங்களை
எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
‘ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக்கூறி, மூன்று நாட்களாக அவரை சிறைக்கைதிபோல வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வருமானவரித் துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை. ஜெயாவின் 570 கோடியை பற்றி இன்றுவரை ஒரு சத்தமும் கிடையாது முழுபூசணியை அல்ல முழுப்பூசணி காண்டேயினர்களையே கரன்சியில் அமுக்குகிறார் அம்மு
ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி, அனைத்து இடங்களிலும் அதிகாரிகளை அனுப்பியபிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை, அவருடைய உடல் நிலையைக்கூட கருத்தில்கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்துவைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானவகையில், ஒருவருடைய அன்றாட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் (illegal Detention). வருமானவரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகனை கடந்த 3 நாட்களாக இரவு-பகல் பாராமல் வீட்டில் கைதிபோல் அடைத்து வைத்திருக்கும் வருமானவரித் துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016 க்குள் வருமானவரி செலுத்தி நேர் செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போது ஜெகத்ரட்சகனின் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமானவரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிக்கிறது’ என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசும் திமுக-வினர், ‘வருமானவரித் துறையினர் ஜெகத்ரட்சகனை யாரும் சந்திக்கவிடவில்லை. அவரை சந்திக்கச் சென்றவர்களிடம், ’நீங்கள் உள்ளே சென்று சந்திக்கலாம். ஆனால் வெளியே திரும்பி வரமுடியாது’ என்று கூறியுள்ளனர். ஜெகத்ரட்சகனிடம் கருணாநிதி தொலைபேசிமூலம் பேச முற்பட்டார். ஆனால் முடியவில்லை. ஜெகத்ரட்சகனை சந்திக்க ஒருவரை நேரில் அனுப்பினார். அவரிடமும் போனால் திரும்ப வெளிய வர அனுமதியில்லை என்று வருமானவரித் துறையினர் கூறிவிட்டனர். அதன்பின் காட்டமாக அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. காலை சோதனை முடிந்தபின் இறுதியாக, ஜெகத்ரட்சகன் கருணாநிதியை நேரில் சந்தித்தார்’ என்றனர். இதன் பின்னணியை விளக்கும்விதமாக. minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக