வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்க வற்புறுத்தினார்கள் .. காசி தியேட்டர் புகார்

இந்நிலையில் கபாலி டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்யுமாறு அந்த படத்தின் படத்தின் தயாரிப்பாளர் தாணு வறுபுறுத்தியதாக சென்னை காசி தியேட்டரின் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது.சென்னை காசி தியேட்டரில், கபாலி படத்தின் டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டதாக கூறி பிளாக்கில் ரூ.2000-க்கு விற்பனை செய்வதாக சர்ச்சை எழுந்தது.";இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காசி தியேட்டர் உரிமையாளர் கூறும்போது, கபாலி பட தயாரிப்பாளரின் வற்புறுத்தலால், கபாலி படத்திற்கான மூன்று நாட்கள் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. இனி டிக்கெட் கிடையாது என்று கூறி, பிளாக்கில் ரூ.2000க்கு விற்பனை செய்தோம் என கூறியுள்ளார்.கபாலி திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்ட், அதற்கு அரசின் 30 சதவீதம் வரிவிலக்கும் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் திரைப்படங்களுக்கு அரசு அளிக்கும் 30 சதவீத வரி விலக்கின் பயன் படம் பார்க்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.


அரசின் வரி விலக்கை பெற்றுள்ளது கபாலி திரைப்படம். ஆனால் அதன் பயனை பொதுமக்களுக்கு அளிக்காமல் தனது வாயில் மட்டும் போட்டுக்கொள்கிறார் அதன் தயாரிப்பாளர். வரி விலக்கின் பயனையும் மக்களுக்கு அளிக்காமல், ரூ.120-க்கான டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்யுமாறு வற்புறுத்துவது எவ்வளவு மோசமான பண ஆசை பிடித்த செயல். பல இடங்களிலும் கபாலி டிக்கெட் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: