போக்கிமான்
கேம் விளையாடிய ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில்
ஒரே நேரத்தில் திரண்டதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் போக்கிமேன் மொபைல் கேம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமை கோடிக்கணக்கான பேர் டவுண்லோட்
செய்து விளையாடி வருகின்றனர். ஜி.பி.எஸ் வசதியுடன் விளையாடக் கூடிய கேம்
இது. நிஜ உலகத்தோடு கனவுலகத்தை இணைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
கனவுலகத்தையும், நிஜ உலகத்தையும் நமது மொபைல் போனில் நாம் இருக்கக் கூடிய இடம் தோன்றும் அதேபோல் போக்கிமொன் கேரக்டர்கள் நிஜ உலகில் தோன்றும். மக்கள் தாங்கள் பார்க்கும் நிஜ உலகில் பல இடங்களுக்கு சென்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த கேமின் ஸ்பெஷாலிட்டி.
கடந்த ஜுலை 13-ம் தேதி நிலவரப்படி போக்கிமான் கேமை 1.5 கோடி பேர் டவுண்ட்லோட் செய்துள்ளனர். இதனால் அதை உருவாக்கிய போக்கிமான் கம்பெனியின் தாய் நிறுவனமான நின்டென்டோவின் பங்குகளின் விலை 50%க்கும் மேல் உயர்ந்துள்ளன.
நம் கண் முன் தோன்றும் போக்கிமான்களை பந்தினை வைத்து எறிந்து பிடிப்பதன் மூலம் பாயிண்ட்களை பெறும் வகையில் இந்த விளையட்டு உருவாக்கப்பட்டுள்ளது. போக்கிமான் கேரக்டர்களை பிடிப்பதற்கு வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டியது இருக்கும் என்பதால் கொஞ்சம் பிரச்னைதான். ஏற்கனவே அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளில் மைதானங்கள், பூங்காக்கள், என எங்கு பார்த்தாலும் போக்கிமான் கேம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நியூயார்க் சென்ட்ல் பார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போக்கிமான் வெபோரியன் கேரக்டரை பிடிக்கத் திரண்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் தங்கள் வாகனங்களை விட்டு விட்டு போக்கிமானை பிடிக்க ஓடினர். இதனால் அங்கு ஒரே கூச்சல் ஏற்பட்டது. விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக