உச்சநீதிமன்றம்
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அருணாச்சலப்பிரதேச அரசை பாதுகாத்தப்
போதிலும், தன் பெரும்பான்மையை நிரூபிக்க படாதபாடுபட்டு
நிரூபித்திருக்கிறார் அருணாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முதல்வரான
நபம் துகி.
அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. நபம் துகி முதல்வராக இருந்துவந்த நிலையில் நபம் துகி மீது அதிருப்தியடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 18 பேரும் சில சுயேட்சைகளும் இணைந்து பாஜக ஆதரவோடு கலிகோபுலை முதல்வராக்க, நபம் துகி இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் ராஜ்கோவா, கலிகோபுலுவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதனால், மீண்டும் அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் எழ, காங்கிரஸ் தலைமை பெமா காண்டுவை முதல்வராக நியமித்தது. முதல்வரான மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார் ஆளுநர். அக்கோரிக்கையை ஏற்ற பெமா காண்டு நேற்று தன் பெரும்பான்மையை நிரூபித்தார். அருணாச்சலப்பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு துணை சபாநாயகர் முன்பு நடந்த வாக்கெடுப்பில் 46 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். பாஜக-வைச் சேர்ந்த 11 எம்எல்ஏ-க்களும் சில சுயேட்சைகளும் பெமா காண்டுவை ஆதரிக்க, அருணாச்சலப்பிரதேச அரசு தப்பியது. இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெமா காண்டு, “அனைவரும் கடந்த கால கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். அதிலிருந்து தவறுகிறவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக