வெள்ளி, 22 ஜூலை, 2016

அரசு பள்ளிகளின் தலித் விடுதிகள்.. உலக மகா கேவலம் நேரடி விசிட் காட்சிகள் .. நக்கீரன்

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1,324 விடுதிகள் உள்ளன.
பள்ளிகளுக்கான விடுதிகளில் மாதத்துக்கு ஒரு மாணவரின் உணவுக்காக ரூ. 755 ஒதுக்கப்படுகிறது.  கல்லூரிகளுக்கான விடுதிகள் என்றால் ரூ.875. இதில்... வாரத்துக்கு கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, ஐந்து நாட்கள் முட்டை உட்பட முறையான மெனுவின்படி உணவு வழங்கப்படவேண்டும். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல, தலைநகர் சென்னை விடுதிகளின் நில வரத்தை நேரில் கண்டுவர... ஜூலை 7-ஆம் தேதியன்று ஒரு சுற்று வந்தோம்.  முதலில் நாம் சென்றது, கோடம்பாக்கம் விடுதி. பெயர், முகத்தை வெளியிடவிரும்பாமல் நம்மிடம் பேசமுன்வந்தனர், விடுதி மாணவர்கள். ""உணவு வெந்தும் வேகாமலும், கல்லும் புழுவுமாக இருப்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. குளிக்கப் பயன்படுத்தும் நீரைத்தான் சமைக்கவும் பயன்படுத்துகிறார் கள். சோறுடன் சாம்பார் மட்டும்தான்... வேறு எந்தக் குழம்பும் செய்வதில்லை. அதிலும் சாம்பாரில் சோறு வடித்த கஞ்சித் தண்ணீரை அதிகமாகக் கலந்து தருகிறார்கள்.


எங்கள்  சொந்தக் காசில், சாம்பார் மட்டும் கடையில் வாங்கிச் சாப்பிடுவோம். வாரத்துக்கு இரண்டு முட்டையும் ஒருநாள் சிக்கனும் போடுவார்கள். இதைத் தவிர வேறு எதையும் போடுவதில்லை''’என விசனப்பட்ட னர், கோடம்பாக்கம் விடுதி மாணவர்கள். சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி, நந்தனம் விடுதி மாணவர்களும் இதே குறைகளை அடுக்கினார்கள். ஆனால், எம்.சி.ராஜா விடுதியின் சமையலரோ, ""தினமும் காலையில் இட்லி, பொங்கல், தோசை, தினமும் முட்டை போடுகிறோம்''’என்று அடித்துக் கூறினார். நந்தனம் விடுதியில் கழிப்பிடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்போனோம். அந்த இடத்தை நெருங்கு வதற்கு முன்பே, நம்மை மிரட்டியது, கழிப்பிடச் சூழல். அந்த அளவுக்கு மிகமிக அசிங்கமாகக் காட்சியளித்தது அந்த இடம். தினமும் அதைப் பயன்படுத்தும் மாண வர்கள், எப்படித்தான் அதை சகித்துக்கொள்கிறார்களோ என்றுதான் யாரையும் நினைக்கவைக்கும், யதார்த்தக் காட்சிகள்.

அதிகாரிகள் யாராவது வந்து பார்ப்பார்களா? நீங்களாவது முறையிட்டிருக்கிறீர்களா?' என மாணவர்களிடம் கேட்டோம். ""நாங்கள் செய்யாத போராட்டம் இல்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை''’என்று சலிப்பான பதிலே மாணவர்களிடமிருந்து வந்தது. மாணவர்களின் குறைகள் குறித்து கேட்டதற்கு, கோடம்பாக்கம் விடுதிக் காப்பாளர் வரதராஜன், எம்.சி.ராஜா விடுதிக் காப்பாளர் எம்.தாமஸ், நந்தனம் விடுதிக் காப்பாளர் பாலமுருகன் மூவரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர். "மேலதிகாரிகள் பேசச் சொன்னால் சொல்கிறோம்'’என ஒரே குரலில் கூறினார்கள். அதையடுத்து, அவர்களுக்கு மேலதிகாரியான ஆதிதிராவிடர் நலத்துறையின் சென்னை மண்டல அலுவலர் சண்முகசுந்தரத்திடம் பேசினோம். அவரும் பதில் கூறாமல் தவிர்த்தார்.

உணவைப் பொறுத்தவரை, காலையில் வியா ழனன்று எலுமிச்சை சோறும் துவையலும்; மற்ற நாட் களில் இட்லி, பொங்கல், ரவை கிச்சடி வழங்கவேண்டும். மதியத்தில் சாம்பார், காய்கறி குருமா, மோர்க்குழம்புடன் கூட்டோ பொரியலோ தரவேண்டும். புதன்தோறும் ஒரு வாரம் ஆட்டிறைச்சியும் மறுவாரம் கோழி இறைச்சியும் தரவேண்டும். மாலையில் சுண்டலுடன் சுக்குமல்லி சுடுநீரோ, தேநீரோ... காபியோ கொடுக்க வேண்டும். இரவில் மூன்று நாட்கள் முட்டை, ஐந்து நாட்கள் பொரியல், ஒருநாள் இட்லி... என முறை பார்த்து வழங்கவேண்டும். ஆனால் அப்படியெல்லாம் ஒருமாதம் கூட உணவு வழங்கியதாகக் கேள்விப்பட்டதுகூட இல்லை'' என்கிறார்கள் மாணவர்கள். அரசு அறிவித்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், உறவினர் அனுமதிக் குறிப் பேடு, விடுதியில் காவலாளி என பலவும் இல்லாமல், கட்டுத்தறியில்லாத விடுதியும் அதைக்கண்டு சகிக்க முடி யாமல் கலங்கி நிற்கும் மாண வர்களுமாக தலித் மாணவர் களின் விடுதி மகிழ்ச்சியில் லாமல் காட்சியளிக்கிறது. நாம் கண்ணால் கண்ட அவல நிலைமையை ஆதி திராவிடர் நலத்துறை இயக்கு நர் சிவசண்முகராஜாவிடம் 8-ஆம் தேதியன்று நேரில் சென்று எடுத்து வைத்தோம். அவரோ, ""ஒருவாரம் கழித்து வாருங்கள்; ஆய்வு செய்து விட்டுச் சொல்கிறேன்'' என்றார். அதையடுத்து, ஜூலை 11-ஆம் தேதியன்று துறை யின் அமைச்சர் ராஜலட்சுமி, கோடம்பாக்கம் விடுதியைப் பார்வையிட்டார். அப் போது, நாம் அதிகாரிகளி டம் தெரிவித்த புகார்கள் குறித்தும் கேட்டார்.  இது ஒருபக்கம் நடக்க...  ஒரு வாரம்வரை குறிப்பிட்ட மூன்று விடுதி களின் நிலைமையையும் அறிந்தபடி இருந்தோம். பெரிய முன்னேற்றம் எதுவு மில்லை.  அமைச்சர்களின் விசிட்டால் ஒருசில பணிகள் மட்டுமே நடந்தன.ஏற்கனவே இயக்குநர் சொல்லியிருந்தபடி ஜூலை 15-ஆம் தேதியன்று, எழிலகம் வளாகத்தில் இருக் கும் துறையின் இயக்குநரகத் துக்கு நம்முடன் சம்பந்தப் பட்ட அதிகாரிகளையும் வரவழைத்திருந்தார். அப்போது விடுதிகளின் காப்பாளர்கள், உரிய பதிலைக் கூறாமல், அதிக மான நபர்கள் தங்கியிருப் பதை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கூறினார்கள்;  சாக்குபோக்காக பதில் கூறி னர். கோபமான ஐ.ஏ.எஸ். சிவசண்முகராஜாவோ,’"" ’போதும் நிறுத்துங்கள். இதுவரை இருந்ததை விடுங்கள், பட்டியலின்படி உணவு கொடுங்கள். குடி தண்ணீரையும் குளிக்கும் தண்ணீரையும்  தனித்தனி யாக வையுங்கள். அடை யாள அட்டையை வைத்து உள்ளே அனுமதியுங்கள். கழிப் பிடத்தை சுத்தமாக வைத் திருக்கவேண்டும்''’என்றவர், நம்மை நோக்கி ""இன்னும் ஒரு வாரத்துக்குள் எல்லாம் சரியாகிவிடும்'' என மேலும் அவகாசம் வாங்கிக்கொண் டார். "ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்' என்று முழங்கிய அண்ணா வின் பெயரைக் கொண்ட கட்சியின் ஆட்சியில், பெரும்பாலும் வறுமையில் உழலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் பற்  றிய அக்கறை இல்லை. அதனால்தான் தலித் மாணவர் விடுதிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன.இனியாவது ஆட்சி யாளர்கள் இதனை சீர்படுத்துவார்களா?>-அ. அருண்பாண்டியன்<">படங்கள்: செண்பக பாண்டியன்<

கருத்துகள் இல்லை: