வியாழன், 21 ஜூலை, 2016

குஜராத்தில் தலித்கள் படுமோசமாக தாக்கப்படுகிறார்கள்.. புதிய விடியோ ஆதாரங்கள்


தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது குஜராத்தில், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம், பார்லி.,யின் இரு சபைகளிலும், நேற்று கடும் அமளியை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில், இந்த பிரச்னையை யார் கிளப்புவது என்பதில், எதிர்க்கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த ஒத்திவைப்புகளை, ராஜ்யசபா சந்திக்க நேரிட்டது. நேற்று ராஜ்யசபா கூடியதும், குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை கிளப்ப, காங்., - எம்.பி.,க்கள் தயாராயினர். அவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில், திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரெய்ன், முதல் ஆளாக எழுந்தார்.
''குஜராத்தில் நடந்திருப்பது, திட்டமிட்ட வன்முறை. எனவே, அந்த பிரச்னை குறித்து விவாதிக்காமல், சபையை நடத்துவதை ஏற்க முடியாது,'' என்றார். கூடவே, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் குரல்களை எழுப்ப, காங்., -எம்.பி.,க்கள் உஷாராயினர்.   ஆயிரம் ஆண்டுகளாக தலித் மக்களை நசுக்கி சுகத்தை அனுபவித்து விட்டு, இன்று வந்து கொண்டு இட ஒதுக்கீடு கூடாது, சலுகை கூடாது, சக்கரை பொங்கல் கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்பது?

சற்று தாமதமாக சுதாரித்த காங்., - எம்.பி.,க்கள், 'குஜராத்தில் நடந்திருப்பது அப்பட்டமான அத்துமீறல்; தலித் விரோத அரசு அங்கு நடக்கிறது. அதுகுறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவரை அனுமதிக்க வேண்டும்' என்றனர்.
காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும், போட்டி போட்டு அமளி யில் இறங்கி இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், அக்கட்சி எம்.பி.,க்களும், தங்கள் பங்கிற்கு களமிறங்கினர்.
'மாயாவதியை பேச அனுமதிக்க வேண்டும்' என்றனர். அதற்கு காங்., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'சபை விதிகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் பேச விரும்பினால், அவருக்கு வாய்ப்பு வழங்கியாக வேண்டும். அவரை தவிர்த்துவிட்டு, வேறொருவருக்கு பேச அனுமதிக்கக் கூடாது' என, வாதிட்டனர்.
அவர்களிடம், துணைத் தலைவர் குரியன், ''மாயாவதி நம் சகோதரி. அவர் ஏதோ கூற விரும்கிறார்,'' என கேட்டுப்பார்க்க, அதை கடுமையாக எதிர்த்த காங்., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்க, சபை ஒத்தி வைக்கப்பட்டது.பின் மீண்டும் கூடியதும், அமளி தொடர்ந்தது. காங்., - பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.,க்கள் ஓரணியாக திரண்டனர். 'தலித் விரோத அரசு ஒழிக' என,
கோஷமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியில், சமூகநீதி துறை அமைச்சர் தன்வர்சந்த் கெலாட் பேசினார்.
''நடந்த சம்பவம் குறித்து, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது; குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்; தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது'' என, அவர் கூறினாலும்,அமளி அடங்காத காரணத்தால், சபை, இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
பின் கேள்வி நேரம் துவங்கிய போதும், சபை தலைவர் ஹமீத் அன்சாரியால், அலுவல்களை தொடர முடியவில்லை. அவருடன் மாயாவதி, கடுமையாக வாதிட்டதையடுத்து, மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கூடிய போதும், ரகளை முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி எம்.பி.,க்கள், சபை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் இட்டதால், பரபரப்பு ஏற்படவே, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பின், சபை கூடியதும், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ''இந்த பிரச்னை குறித்து, இப்போதே கூட விவாதம் நடத்த தயார்,'' என்றார்; அதற்கு பலனில்லை. அதன் பின்னரும் ரகளை தொடர்ந்ததால் ராஜ்யசபா, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவிலும்.

.
குஜராத்தில், தலித் இளைஞர் மீது நடந்த தாக்குதல் தொடர்பான பிரச்னை, லோக்சபாவிலும் எதிரொலித்தது.''அடுத்த ஆண்டு, குஜராத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, தற்போதே, மத, ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளன,'' என, காங்., -எம்.பி., சுரேஷ் பேசினார். இதற்கு,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பதிலளித்து பேசினார்.காஷ்மீர் கலவர விவகாரம் தொடர்பாகவும் லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது.

குஜராத்தில் நடந்ததுஎன்ன?


ஆமதாபாத் அருகே உள்ள, உனா என்ற பகுதியில், பசு மாட்டைக் கொன்றதாக, நான்கு தலித் இளைஞர்களை, பசு பாதுகாப்புப் படையினர், கடந்த 11ம் தேதி பிடித்தனர். அந்த இளைஞர்களை காரில் கட்டி வைத்து, சரமாரியாக அடித்துள்ளனர்.மேலும், அதை வீடியோ எடுத்து சமூகதளங்களிலும் வெளியிட்டனர். ஆனால், 'உயிரிழந்த பசுவின் தோலை உரித்ததாக' அந்த இளை எதிரொலித்ததை தொடர்ந்து, காங்., துணைத் தலைவர் ராகுல், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், குஜராத் சென்று, பாதிக்கப்பட்டவர்களைசந்திக்க உள்ளதாகஅறிவித்து உள்ளனர்.


பழங்கதை வேண்டாமே!


லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய பின், காங்., லோக்சபா தலைவர்மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''எந்தப் பிரச்னையை எடுத்தாலும், 60 - 70 ஆண்டுகளுக்கு முன்நடந்த, நம் தாத்தா, பாட்டி கதைகளையே பேசுகின்றனர்; பிரச்னை குறித்து பேசுவதில்லை. உங்கள் அப்பா, தாத்தாக்கள் எல்லாம்,காங்கிரசில் இருந்திருப்பர்என்பதை, நினைவில்கொள்ளுங்கள்,'' என்றார்இதற்கு, அமைச்சர் வெங்கையா நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். கார்கேயின் பேச்சை, சபை குறிப்பில் இருந்து நீக்கும்படி கோரினார். ஆனால், அது ஏற்கப்படவில்லை.

பிரதமர் வேதனை: ராஜ்நாத் சிங் தகவல்

லோக்சபாவில், இதே பிரச்னை குறித்து விளக்கமளித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: குஜராத் சம்பவம் கண்டனத்திற்குரியது. தலித்துகள் மீது நடந்துள்ள தாக்குதல் குறித்து, பிரதமர் வேதனை அடைந்துள்ளார். இதுவரையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கடமை தவறியநான்கு போலீசார், 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டு உள்ளனர். குஜராத் என்றில்லை; எந்த மாநிலமாக இருந்தாலும் சரி; தலித்துகளுக்கு பாதுகாப்பாக, மத்திய அரசு நிச்சயம் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: