சிறையில் காவலர்கள் தன்னை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததாக பியூஸ் மனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார்.
சேலம் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியான பியூஸ் மனுஷ் சிறை
வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர்,
செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மனுஷ்,
காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். சேலம் மத்திய சிறை
கண்காணிப்பாளரும் கண்மூடித்தனமாக தன்னை தாக்கியதாக பியூஸ் மனுஷ் புகார்
தெரிவித்துள்ளார்.
”20க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறையில் என்னை நிர்வாணமாக்கி காலணி
அணிந்திருந்த காலால் மிதித்து சித்ரவதை செய்ததுடன், அறுவை சிகிச்சை மூலம்
புற்றுநோய் கட்டி நீக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் தாக்குதல்
நடத்தினர். காதில் தாக்கினர். இருட்டறையில் தங்க வைத்ததுடன், போர்வை கூட
வழங்கவில்லை” என்று பியூஸ் மனுஷ் தெரிவித்தார்.
பூமியை காக்கும் பணியில் ஈடுபட்டதற்காக கொடுக்கப்படும் பரிசா இந்த தாக்குதல் என்று கேள்வி எழுப்பிய பியூஸ் மனுஷ், தன் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். சேலத்தில் மேம்பால பணியை ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
1997 முதல் இன்று வரை மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பியூஸ் மனுஷ் வலியுறுத்தினார். சிறையில் நடந்த சித்ரவதைகளை வெளியே கூறக்கூடாது என தன்னை காவலர்கள் எச்சரித்ததாகவும் பியூஸ் மனுஷ் புகார் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் யாரையேனும் தான் விமர்சித்து எழுதியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த மனுஷ், தனது சமூக பணிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்
http://ns7.tv/ta

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக