திங்கள், 26 அக்டோபர், 2015

ரூ 3 ஆயிரம் கோடி பட்டேல் சிலை..வாடகை தாய்மார்களின் தலைநகரம் குஜராத்தில்....பட்டேலின் வாரிசு மோடியாம்.


குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு பகுதியில் கேவடியா என்ற இடத்தில் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட உள்ளது.
நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்த போது இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக சர்தார் படேல் சிலை கருதப்படுகிறது.
உலகிலேயே மிக உயரமான சிலையாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட உள்ளது. ‘‘ஒற்றுமை சிலை’’ என்று புகழப்படும் இந்த சிலை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் தயாராகி வருகிறது.
இந்த சிலையை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இரும்பு கலவை வார்ப்புகளை பயன்படுத்தி படேல் சிலை உருவாகி வருகிறது.  உலக வாடகை தாய்மார்களின் தலைநகரமாக குஜராத் மாறிவிட்டது. வேறு எங்குமே நடக்காத இந்த அநியாயம் டுபாக்கூர் மோடியின் ஆட்சியில்தான் இந்த அளவு பல்கி பெருகியது இதுக்கும் சேர்த்தே சிலை வையுங்கடா ..

நூற்றுக்கணக்கான எல் அண்ட் டி ஊழியர்கள் இந்த சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் படேல் சிலை தயாரிப்பு பணியில் சீன தொழிலாளர்களும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல் அண்ட் டி நிறுவனம் ஷாங்காயில் இருந்து நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்ய எல் அண்ட் டி நிறுவனமும், சீன நிறுவனமும் மறுத்து விட்டன.
என்றாலும் சர்தார் படேல் சிலை தயாரிப்புக்கு சீனாவின் தொழில் நுட்பம் கேட்டு பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சீனாவில் சமீபத்தில் 88 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான புத்தர் சிலை கட்டப்பட்டது.
அந்த சிலை கட்டுமானத்தை செய்த சீன நிறுவனத்திடம் இருந்து தொழில் நுட்பம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அந்த தொழில்நுட்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
‘‘மேக் இன் இந்தியா’’ என்று பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான சர்தார் படேல் சிலை தயாரிப்புக்கு சீன தொழிலாளர்களும், சீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: