திங்கள், 26 அக்டோபர், 2015

உதவியாளர்களை நம்பி 100 சார்-பதிவகங்கள்: நில மோசடி அபாயம்

தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில், முறையாக தேர்ச்சி பெறாத உதவியாளர்கள், தற்காலிக அடிப்படையில், சார்-பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, நில மோசடிக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழகத்தில், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒரு பதிவாளர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உதவியாளர்கள், எழுத்தர், இரண்டு அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், அன்றாட பணிகள் முடங்கும் சூழல் நிலவுகிறது. இதை சமாளிக்க, அரசு விதிகளை மீறி, வெளியாட்களை தினக்கூலி அடிப்படையில், சார்-பதிவாளர்கள் நியமித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற தினக்கூலி பணியாளர்களை நம்பியே, பல சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், உதவியாளர்களும், இள நிலை உதவியாளர்களே சார்-பதிவாளர் பணியை, தற்காலிக பணியாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், நில மோசடி தொடர்பான ஆவணங்கள் பதிவாகி விடுகின்றன.   பல பதிவகங்களில் 5001000-2000 ன்னு இந்த அல்லக்கைகளை வச்சுதான் வேலையே நடக்குது.


நில மோசடி:

சமீபத்தில், சென்னை, தி.நகரில் உள்ள, 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு, பட்டுக்கோட்டை பாப்பாநாடு சார்-பதிவாளர் அலுவலகத்தில், பொது அதிகார ஆவணம் பதிவு செய்து அபகரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், முறையாக தேர்ச்சி பெற்ற சார்-பதிவாளர் இல்லாததால், உதவியாளரின் கவனக் குறைவால் இந்த மோசடி ஆவணம் பதிவானது தெரிய வந்தது.

காரணம் என்ன?

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முறையாக பயிற்சி பெற்ற சார்-பதிவாளர்களுக்கே, சில சமயங்களில் மோசடி ஆவணங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். பயிற்சி இல்லாதவர்களை சார்-பதிவாளராக்கும்போது, அவர்களால் ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க முடிவதில்லை, என்றார்  தினமலர்.com

கருத்துகள் இல்லை: