
வாடகை தாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு இன்று (அக், 28) மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், வர்த்தக ரீதியிலான வாடகை தாய் முறைக்கு விரைவில் தடை விதிக்க உள்ளோம். அதனால் வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கு அவுனுமதி அளிக்கப்படாது. அரசு உயர் மட்டக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் சொர்க்க மாநிலமான குஜராத்தில் தான் இந்த கொடுமை கொழுந்து விட்டு எரிகிறது
"இந்த விவகாரம் தொடர்பாக சோலிசிடர் ஜெனரல் ரஞ்சித் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார். அதேசமயம் குழந்தையில்லாத இந்திய தம்பதிகள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதில் எந்த தடையும் இல்லை. அது குறித்தும் ரஞ்சித் குமார் தெளிவுபடுத்துவார். இந்தியாவில் இருந்து செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருக்கள் இலவசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 2013ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக இயக்குனருக்கு (Directorate General of Foreign Trade) விதிக்கப்பட்ட உத்தரவும் திரும்பப் பெறப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் மத்திய அரசு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக