வியாழன், 29 அக்டோபர், 2015

Indigo விமான அடாவடி ..கவுன் அணிந்த பெண்ணை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்த ஊழியர்கள்!

மும்பை விமான நிலையத்தில் குட்டை கவுன் அணிந்த பெண்ணை விமானத்தில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை வந்து, அங்கிருந்து புதுடெல்லிக்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் செல்ல ஆயத்தமாகியுள்ளார். ஆனால் அந்த பெண் முழங்கால் நீள கவுன் அணிந்திருந்ததை காரணமாக கூறி அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளனர் இண்டிகோ விமான ஊழியர்கள். மேலும் அவரது உடை கண்ணியமாக இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது சக பெண் பயணி புரபி தாஸ் என்பவரால் பேஸ்புக்கில் பகிரப்பட்டதால், தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புரபி தாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் பெண்களின் சீருடைகள் முழங்கால் வரைதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். Friends I would like to recount a disturbing instance of harassment of a young female passenger by three male Indigo employees at Mumbai airport this morning. She was connecting from Mumbai to Delhi via Indigo airlines (6.30 AM) after an international flight from Doha to Mumbai. She was not permitted to board because she was wearing a knee length frock which was considered inappropriate wear by an airlines that has frocks of the same length for its stewardesses' uniforms! She missed her flight and was told that she would be allowed to board the next Indigo flight only after she changed into something covering her legs! A male co-passenger who tried to help her was threatened that he would not be allowed to board his flight if he intervened!
When I reported the incident to Indigo customer care, they argued that rules do not allow employees travelling by the airlines to wear a frock. But the girl was not an employee, she was the sister of one. Moral policing or gender bias by Indigo? Hope India's top private airlines is not going to send out this vibe on the occasion of its first IPO! Also the carrier's recent baggage policy allowing only 1 item including lap top bag and/or ladies purse is totally customer unfriendly. No international passenger can think of connecting by Indigo at this rate. Btw, this policy is applied in a totally discretionary manner with the staff allowing or disallowing it randomly and at their pleasure! உடை காரணமாக விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத அந்த பெண், தனது உடையை மாற்றிக்கொண்டு மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு போய் சேர்ந்துள்ளார்

கருத்துகள் இல்லை: