
எல்லைக்குள் மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்தால், தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை மீன்வளத்துறை அதிகாரியின் பேச்சு ஏற்புடையதல்ல. இலங்கை சிறையிலுள்ள 86 தமிழக மீனவர்கள் விடுவிக்க முயற்சி எடுத்த பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்தால், எல்லை தாண்டும் இலங்கை மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் அதுபோல் இருமடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் சூழல் உருவாகும் என கூறினார்.dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக