சனி, 2 மே, 2015

பஞ்சாப் முதல்வரின் பேருந்து பாலியல் கொலை! ஊத்தி மூட பிரகாஷ் சிங் பாதல் முயற்சி!

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.> பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன் சென்ற சிறுமியை கண்டக்டர் மற்றும் சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதை தடுக்க முயன்ற போது அந்த கும்பல் இருவரையும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டது. இதில் அந்த சிறுமி பலியானார். அவரது தாயார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் தொந்தரவு நடைபெற்றதாக கூறப்படும் தனியார் பஸ் துணை முதல்–மந்திரி சுக்பிர் சிங் பாதலின் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால் சம்பவத்தை விபத்தாக மாற்ற ஆளும் அகாலி தளம் கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.


இந்த சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. மாநில அரசு வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டு தொகையான 20 லட்சம் ரூபாயை ஏற்றுக் கொள்ள மறுத்த சிறுமியின் தந்தை எனது மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் அவளது பிரேதத்தை பெற்றுச் சென்று அடக்கம் செய்வேன் என கூறி வருகிறார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான ஆர்பிட் பஸ்களை இயக்க தடை விதித்து பஞ்சாப் மாநில துணை முதல்–மந்திரி சுக்பிர் சிங் பாதல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அந்த பஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரையும் நன்னடத்தை சார்ந்த ஒழுக்கமுறை பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். அந்த பயிற்சி நிறைவடையும்வரை ஆர்பிட் நிறுவன பஸ்களை சாலைகளில் ஓட்டக்கூடாது என அந்த உத்தரவில் சுக்பிர் சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பலியான சிறுமியின் உறவினர் ஒருவர், ‘‘இந்த பஸ்களுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது. அவற்றின் பெர்மிட்டுகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் லைசென்சுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: