என்.ஜி.ஓ (Non Governmental Organisations) என்று சுருக்கமாக அழைக்கப்படும்
தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று, இந்தியாவில் சேவை
உள்ளிட்ட பல காரியங்களுக்காக அந்த நிதியை பயன்படுத்துகின்றன. தற்போது
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Contribution
Regulation Act) மீறியதற்காக சுமார் 9 ஆயிரம் என்.ஜி.ஓ.க்களின் உரிமத்தை
மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில்
கூறியிருப்பதாவது, 2009-2010, 2010-2011 மற்றும் 2011-2012 ஆகிய
ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துமாறு 10 ஆயிரத்து 343 என்.ஜி.ஓ.க்களுக்கு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது, அந்த நிதி யாரிடமிருந்து வந்தது, எதற்காக
நிதி பெறப்பட்டது, அதை வைத்து என்ன செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட
விவரங்களை ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறு அந்த நோட்டீஸில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இனி சங்பரிவார் ஜியோக்கள் மட்டுமே இயங்க முடியும்?
நோட்டீஸ் அனுப்பப்பட்ட என்.ஜி.ஓ.க்களில் வெறும் 229 என்.ஜி.ஒ.க்கள் மட்டுமே பதில் அளித்தன. எஞ்சிய 510 என்.ஜி.ஓ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறியதற்காக 8 ஆயிரத்து 975 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு சட்ட விதிமீறல் செய்த காரணத்திற்காக கிரீன் பீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததுடன் அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக