திங்கள், 27 ஏப்ரல், 2015

தண்ணீர் திறக்காமல் ஆந்திரா அலட்சியம் ! 25 கோடி கப்பம் கட்டியும் பலனில்லை!

கிருஷ்ணா நீரைத் திறக்க, ஒப்பந்தப்படி தமிழக அரசு, 25 கோடி ரூபாய் வழங்கியும் பலனில்லை. நக்சல் பிரச்னை, வெளிமாநிலங்களை காரணம் காட்டி, தண்ணீர் திறப்பை ஆந்திரா நிறுத்தியுள்ளது. ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல் தவணை யில், 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஜூன் வரை, இரண்டாவது தவணையில், 4 டி.எம்.சி.,யும் தர வேண்டும். ஆனாலும், இந்த தண்ணீரை ஆந்திரா முறையாக வழங்குவது இல்லை. கடந்த, 2014, ஜூலை வரை, தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழக அரசு தரப்பில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் போக, இந்த தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்தது. அதுவும், இடை இடையே நிறுத்தப்பட்டது.    தண்ணீர் திறக்க ஆண்டவனை வேண்டி அடிமைகள் பால்குடம், தீசட்டி, காவடி, மண்சோறு என்று தூள் பரத்த போகிறார்கள். செல்லூர் ராஜ் பறவை காவடியில் தொங்கி கொண்டு வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முதல் தவணை காலத்தில், 3.30 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தது. இரண்டாம் தவணை கால நீர் திறப்பும் தாமதமானது. தமிழக தலைமை செயலர் ஞானதேசிகன், பொதுப்பணித் துறை செயலர் பழனியப்பன், முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆந்திரா சென்று, அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். பராமரிப்பு கட்டணமாக, 25 கோடி ரூபாயை, ஆந்திர அதிகாரிகளிடம் வழங்கினர்.< நிறுத்தம்:

இதையடுத்து, தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது. பணம் முழுவதும் செலுத்தப்பட்டதால், இரண்டாவது தவணை காலத்தில், 4 டி.எம்.சி., முழுவதும் கிடைக்கும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர். திடீரென, மார்ச், 20ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தண்ணீர் நிறுத்தப் பட்டது.தமிழக அதிகாரிகள் மீண்டும் ஆந்திரா சென்று, தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்தினர். அதன்படி, ஏப்., 10ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு, 24ம் தேதி இரவு மீண்டும் நிறுத்தப்பட்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருடும் நக்சல்கள்:

இதுகுறித்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'கால்வாயில் நக்சல்கள் தண்ணீர் திருடுவதைத் தடுக்க முடியவில்லை; தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களும், ஆந்திராவுக்கு தர வேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்கவில்லை. இதனால், தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் வழங்க முடியவில்லை' என, ஆந்திர அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு தான் இனி, முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: