புதன், 29 ஏப்ரல், 2015

France முஸ்லிம் மாணவிகளின் நீண்ட கருப்பு உடைக்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம்

கருப்பு
நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. பிரான்சிலுள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் ;கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் அந்தப் பள்ளியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாரா என்று அழைக்கப்படும் 15 வயதான அந்தப் பெண், பிரஞ்சு அரசு கொண்டுவந்த அந்தச் சட்டத்துக்கு அமைவாக தலையை மறைக்கும்விதமாக அணிந்துவந்த முக்காடை பள்ளிக்குள் நுழைந்ததும் நீக்கினாலும், முழங்கால் வரை அணிந்திருந்த கருப்பு நிற பாவாடையை தடை செய்வதற்கு அந்தச் சட்டத்தில் வழியில்லை என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாங்களை முஸ்லிம்கள் என்று தெளிவாகக் காட்டும் வகையில் பாவாடைகள் அணிந்து வருவதன் மூலம், அந்தச் சட்டத்திலுள்ள விதிமுறைகளுக்கு அவரகள் சவால் விடுகிறார்கள் என பிரான்சிலுள்ள சில தலைமை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். bbc.co.uk

கருத்துகள் இல்லை: