சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி,
உதவி இயக்குநராக உள்ள பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
இப்போது பெற்றொர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
சமீபத்தில், இனிமேல் நடிப்பதில் என்கிற முடிவை
எடுத்திருந்தார் விஜயலட்சுமி. நடித்தது போதும். விரைவில் தயாரிப்பாளர்
ஆகிறேன். படம் பற்றிய விவரத்தை விரைவில் அறிவிக்கிறேன். அனைவருடைய ஆதரவும்
எனக்குத் தேவை என்று அவர் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார். இதையடுத்து
விஜயலட்சுமியின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
விஜயலட்சுமி - பெரோஸ் முகமதுவின் திருமணம் செப்டெம்பர்
மாதம் நடைபெற உள்ளது என்று விஜயலட்சுமியின் சகோதரி நிரஞ்சனி அகத்தியன்
இந்தச் செய்தியை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
விஜயலட்சுமி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம்
செய்துகொள்வதால் விரைவில் மதம் மாறிவிடுவார் என்றும் சிலர் நினைத்தார்கள்.
இதுகுறித்து விஜயலட்சுமி ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். நாளிதழ்
ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பெரோஸூம் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து
நண்பர்களாக உள்ளோம். எங்களின் காதலை இரு குடும்பத்தாரும்
ஏற்றுக்கொண்டார்கள்.
பெரோஸ், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்
நான் மதம் மாறவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான்
நானாக இருப்பேன். அவர் அவராக இருப்பார்” என்று சொன்னவர் திருமணத்துக்குப்
பிறகு நடிக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக