புதன், 29 ஏப்ரல், 2015

இந்திய வரலாறு ஒரு கறை என்று மோடி வெளிநாட்டில் உளறியதற்கு பார்லிமெண்டில் கடும் அமளி

ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆற்றிய உரையின்போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' எனப் பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை' என்றார். ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், ஜெர்மனியிலும், கனடாவிலும் உரையாற்றியபோது, காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களைக் குறிக்கும் வகையில், "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைத்து தூய்மையைக் கொண்டு வருவோம்' என்று மோடி குறிப்பிட்டார். யாரோ நவாஸ் சேரிப் பேசுற பேப்பரை இந்த ஆளு முன்னாடி வச்சுட்டாய்ங்களோ ?அவசரத்திலே இந்த ஆளும் வாசிச்சு தொலைசிருப்பார் விட்டு தள்ளுங்க . இன்னும் என்னன்னா கூத்தெல்லாம் காட்ட போறாகளோ?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்தார். பிரதமரின் பேச்சு நாட்டின் கெளரவத்தையும், கண்ணியத்தையும் குறைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் புகாருக்குப் பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
"ஊழலால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படவில்லை; ஆனால், அதைச் சுட்டிக்காட்டி வெளிநாடுகளில் பேசுவதால்தான் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுகிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. இந்தப் புதிய கொள்கையைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஊழலைப் பற்றி இந்தியாவில் பேசினாலும், அல்லது பெர்லினில் பேசினாலும், அதை இணையதளங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்துவிடும்.
ஆக, நாம் இங்கே விவாதிப்பதையும்கூட, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை வெளிநாட்டில் பேசியது தவறு எனக் கூற முடியாது. வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் கிடையாது.
காங்கிரஸூக்கு சவால்: கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றார் ஜேட்லி. பின்னர், பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும், "காங்கிரஸ் ஊழல்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.
இதைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிரதமரின் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நிராகரித்தார்.
இந்தக் காரசார விவாதத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை அடுத்தடுத்து இரண்டு முறை தலா 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, ஜேட்லி மற்றும் நக்வியின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது பேசிய ஆனந்த் சர்மா, "ஊழல்கள் குறித்து ஏற்கெனவே விவாதங்கள் நடைபெற்றுள்ளன; பிரதமர் நடந்து கொண்ட விதம் குறித்துதான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்; இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. dinamani.com

கருத்துகள் இல்லை: