தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு
2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது.
ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில்
ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது.
விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5
புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த
விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.
அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை
நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் தரநிலையில் 2-ம் இடத்தில் இருந்த இந்திரா காந்தி விமான நிலையம் 2014-ம் ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியது. 2007-ம் ஆண்டு 3.2 புள்ளிகளையே எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தகக்து. 2014-15-ம் ஆண்டில் சுமார் 4 கோடி பயணிகளை திறம்பட நிர்வகித்த இந்திரா காந்தி விமான நிலையம் நாளொன்றுக்கு சராசரியாக 885 விமானங்கள் போக்குவரத்தையும், சுமார் 696,000 மெட்ரிக் டன்கள் சரக்குப் போக்குவரத்தையும் கையாண்டுள்ளது tamil.hindu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக