திருச்சி: மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் திருச்சியில் நடந்த மேதின விழா ஊா்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் நேற்று மே தின ஊா்வலத்டஅனுமதி கேட்டு
போலீசில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும் தடையை மீறி பேரணி நடத்த திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம்,
திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மகஇகவினா் 300க்கும் மேற்பட்டோர்,
காந்தி மார்கெட் பகுதிகளில் குவிந்தனா். கூட்டம் அதிகமானதை தொடர்ந்து
அங்கு போலீ ஸார் குவிக்கப்பட்டனர்.
பிறகு வேறுவழியின்றி மாற்று பாதையில் பேரணி நடத்திக் கொள்ள கடைசி நேரத்தில் அனுமதி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் விடு தலை முன்னணியின் மாநில தலைவா் நிர்மலா, பேரணியை துவக்கி வைக்க, பெல் பாய்லா் பிளான்ட் ஒா்கா்ஸ் யூனியன் பொதுச்செயலாளா் சுந்தர்ராஜ் தலைமையில் காந்தி மார்க்கெட், மரக்கடை, ஹோலி கிராஸ் கல்லூரி வழியாக பேரணி சென்றடைந்தது. அங்கு உழைப்பாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பேரணியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் ஹைலைட், இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பிடிக்கப்பட்ட ஒரு பேனர்.
எம். ஜி. ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பட போஸ்டரை உல்டாவாக மாற்றி, அதானி பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் குஜராத்தின் பவர் ஸ்டார், மேக் இன் இந்தியா மேக்கப் மேன் மோடியின் உலகம் சுற்றும் வாலிபன், வசூலில் உலக சாதனையை முறியடித்த இரண்டாவது வாரம் என எழுதப்பட்ட ஒரு பதாகையை பிடித்திருந்தார்கள்.
பேரணி நடந்த அதே சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் உத்தமவில்லன் படம்
ரிலீஸுக்காக கமல் ரசிகர்கள் காத்து கிடந்தனர். பேனரை பார்த்து,
"வித்தியாசமான கெட்டப்பில் மோடி கலக்குறார்யா!" என கமல் ரசிகர்கள்
கலாய்த்ததும் காண முடிந்தது.
- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்விகடன்.com
இதனைத் தொடர்ந்து பெண்கள் விடு தலை முன்னணியின் மாநில தலைவா் நிர்மலா, பேரணியை துவக்கி வைக்க, பெல் பாய்லா் பிளான்ட் ஒா்கா்ஸ் யூனியன் பொதுச்செயலாளா் சுந்தர்ராஜ் தலைமையில் காந்தி மார்க்கெட், மரக்கடை, ஹோலி கிராஸ் கல்லூரி வழியாக பேரணி சென்றடைந்தது. அங்கு உழைப்பாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பேரணியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் ஹைலைட், இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பிடிக்கப்பட்ட ஒரு பேனர்.
எம். ஜி. ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பட போஸ்டரை உல்டாவாக மாற்றி, அதானி பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் குஜராத்தின் பவர் ஸ்டார், மேக் இன் இந்தியா மேக்கப் மேன் மோடியின் உலகம் சுற்றும் வாலிபன், வசூலில் உலக சாதனையை முறியடித்த இரண்டாவது வாரம் என எழுதப்பட்ட ஒரு பதாகையை பிடித்திருந்தார்கள்.
- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக