வியாழன், 30 ஏப்ரல், 2015

அரசு அங்கீகாரம் இல்லாத ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி 4 ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை

நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான, சென்னை, கிண்டி யில் செயல்படும் ஆஷ்ரம் பள்ளி, கடந்த, நான்கு ஆண்டுகளாக அங்கீகாரமின்றி செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 'ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி' என்ற அறக்கட்டளையை நடிகர் ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். அறக்கட்டளை செயலர், லதா ரஜினிகாந்த். இந்த அறக்கட்டளை சார்பில், சென்னை, கிண்டி, ரேஸ் கோர்ஸ் சாலையில், ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.   அறக்கட்டளை என்றுதான் பெயர்..ஆனால் பகற்கொள்ளையாக அந்த பள்ளி இயங்குகின்றது. பள்ளியின் கட்டணம் வெகு ஜோர். பள்ளியில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாதது .அறக்கட்டளை என்றால் ஓரளவேனும் பிள்ளைகளுக்கு உதவிடும் பொருட்டு நடத்திட வேண்டும்..அனால் இவர்கள் கொள்ளையோ கொள்ளை அடிக்கின்றார்கள். பல மாணவர்கள் சில ஆண்டுகளில் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள் என்பதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்..இது பொய்யான செய்தி அல்ல..நண்பரின் பிள்ளைகள் இங்கேதான் படித்தார்கள்.ஒரே ஆண்டுதான்.வேறு பள்ளிக்கு மாற்றிகொண்டார்கள்.. அவ்வளவு தரம்..ராகவேந்திரர் பெயரில் ஓர் கொள்ளை..
இப்பள்ளி, 1996 முதல், மெட்ரிக் பள்ளி இயக்குனரக அங்கீகாரம் பெற்று இயங்கி வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு, ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.ஆனால், 2010 - 11 கல்வி ஆண்டுடன் இப்பள்ளியின் அங்கீகாரம் முடிந்தது. கடந்த, நான்கு ஆண்டுகளாக, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில், விண்ணப்பம் மட்டும் அளித்து விட்டு, அங்கீகாரம் புதுப்பிப்பு ஆணை பெறாமல், பள்ளியை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.இப்பள்ளியை மூட நடவடிக்கை எடுக்குமாறு, ஆஷ்ரம் பள்ளி உள்ள இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு சார்பில், இரண்டு வாரங்களுக்கு முன், சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதேபோல், பள்ளி உள்ள இடம் குறித்த விதிமுறைகளும் முறையாக பின்பற்றாததால், அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.< இதுகுறித்து, கிடைத்த தகவல்கள் வருமாறு:


*ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில், வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.
*இந்த இடத்திற்கான, 'லீஸ்' முடிந்து விட்ட நிலையில், மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை.
*நிலத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்ததால், பள்ளிக்கு அங்கீகாரம் பெறவும், பிரச்னையை சுமுகமாக முடிக்கவும் ரஜினிகாந்த் தரப்பில், பல மட்டங்களில் இருந்து முயற்சித்து வருகின்றனர்.
*மேலும், இப்பள்ளி, இரண்டு பிரிவு இடங்களில் செயல்பட்டு வருவதால், அரசாணை 48ன் படி, அங்கீகாரம் பெற விதியில்லை. அரசாணை 48ல், 'இரண்டு பிரிவு இடங்களில், ஒரு பள்ளி செயல்பட்டால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, கூறப்பட்டுள்ளது. எனவே, ஆஷ்ரம் பள்ளிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக, அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை.
*முடிந்து போன அங்கீகாரத்தை கொண்டு, மாணவர் சேர்க்கை நடந்து, பள்ளி செயல்படுகிறது.
*அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்த அனுமதியில்லை என்பதால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, தகவல்கள் கிடைத்துள்ளன.

ரஜினி தரப்பு பதில் என்ன?

இப்பிரச்னை குறித்து, ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி வந்தனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ''எங்கள் பள்ளி சார்பில், அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் அளித்துள்ளோம்; விதிகளை சரியாகப் பின்பற்றுகிறோம்,'' என்றார்.

லதா ரஜினிகாந்தின் உதவியாளர் சரஸ்வதியிடம் கேட்ட போது,
''எங்கள் பள்ளிக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தி, பள்ளியை நடத்தி வருகிறோம்,'' என்றார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: