சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில், நான்காண்டு சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவர் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்தது. அதில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.
அதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை, தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
க.அன்பழகன் சார்பில் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதிட்டார். ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன், கர்நாடக அரசு சார்பில் எம்.என்.ராவ் ஆகியோர் வாதிட்டனர்.
இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறு. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. கர்நாடக அரசுக்குத்தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் உள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்து உள்ளதால், மறு விசாரணை தேவையில்லை. க.அன்பழகன் தரப்புக்கு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்யவும், கர்நாடக அரசும் தனது வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர் nakkheera.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக