வியாழன், 30 ஏப்ரல், 2015

டாப்ஸி: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை!

திருமணம் பற்றி நடிகை டாப்சி சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். கல்யாணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கி சமீபத்தில் ரிலீசான ‘ஓ காதல் கண்மணி’ படம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கதையம்சம் கொண்டது. இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தின் சர்ச்சை கதை பற்றி நித்யாமேனன் கூறும்போது, முந்தைய காலங்களில் திருமணத்துக்கு முன் மணமக்கள் சந்திப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போது அப்படி இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது அவரவர் விருப்பத்தை பொருத்தது. அது தவறல்ல’’ என்றார்.


இதுபோல் டாப்சியும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது எனக்கு தவறாக படவில்லை. இது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது. நிறைய பேர் திருமணம் செய்து கொண்டு சண்டை, சச்சரவு என இருக்கிறார்கள். விவாகரத்து வரை போகிறார்கள். அதை பார்க்கும்போது திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சிறந்தது. பிடிக்காவிட்டால் பிரிந்து போய்விடலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: