நெல்லை:
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்வதற்கு முன் நெல்லையில் உள்ள ஆடிட்டரை
பார்க்க சென்றார் என்று சங்கரன்கோவில் கோர்ட்டில் வேளாண் அதிகாரி
வாக்குமூலம் அளித்துள்ளார்.நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி
தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மனைவி சரஸ்வதி, நெல்லை வேளாண் துணை
இயக்குனர் சந்திரசேகர், மேற்பார்வையாளர் பீட்டர்ஐசக் மற்றும் தேவேந்திரன்,
ஓய்வு பெற்ற அதிகாரி ராஜகோபால் ஆகியோர் நேற்று சங்கரன்கோவில் குற்றவியல்
நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.சரஸ்வதி தனது கணவர்
தற்கொலைக்கு யார், யார்? காரணம் என்ற தகவலை வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதேபோல் வேளாண் அதிகாரி ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில், நான் கடந்த
பிப்ரவரி 20ம்தேதி சேரன்மகாதேவியில் இருந்து நெல்லைக்கு ரயிலில் வந்து
கொண்டிருந்தேன். அன்று காலை 9 மணிக்கு முத்துக்குமாரசாமி எனக்கு போன்
செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் ரயிலில்
வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன்.
ரயிலை விட்டு இறங்கியதும் என்னை ஆடிட்டரை பார்க்க வேண்டும் என்று கூறி பைக்கில் அழைத்துச் சென்றார். பின்னர் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஆடிட்டர் வீட்டிற்கு சென்றோம். ஆனால் அங்கு அவரது வீடு பூட்டிக்கிடந்தது.அப்போது முத்துக்குமாரசாமியிடம் நான், இன்று (பிப்.20ம்தேதி) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நீங்கள் செல்லவில்லையா எனக்கேட்டேன். அதற்கு அவர், தனக்கு பதிலாக வேறொரு அதிகாரியை அனுப்பி வைத்துவிட்டதாக கூறினார். பின்னர் நான் அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.மதியம் 1 மணியளவில் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீசார், எங்கள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது பேன்ட் பாக்கெட்டில் பைக் சாவி, ஐடி கார்டு, ஆடிட்டரின் விசிட்டிங் கார்டு ஆகியவை இருந்ததாக கூறினர். அப்போது நான், போலீசாரிடம் நல்ல மனிதர் இறந்து விட்டாரே, யாரிடமும் கோபப்படமாட்டார். எல்லோரிடமும் அன்பாக பழகுவார், வேலையில் கரெக்டாக இருப்பார். பணி நியமனம் தொடர்பாக அவரை பாடாய்படுத்தி விட்டனர். அதனால் தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்று வேளாண் அதிகாரி வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். - See more //tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக