கனடா,மே.01 (டி.என்.எஸ்) ‘ஓ’ பிரிவு போன்று எல்லா பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.>ரத்தத்தில்
‘ஓ’ பிரிவு அனைவரின் உடல்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையாகும். அதே
நேரத்தில் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படும் போது வங்கியில் ‘ஓ’ ரத்த
பிரிவோ, அல்லது நோயாளிக்கு தேவைப்படும் அவரது சொந்த பிரிவு ரத்தம்
கிடைக்காத நிலையில் கடும் அவதி ஏற்படுகிறது.அதை தவிர்க்க
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தனர். தற்போது அதற்கு
உரிய பலன் கிடைத்திருக்கிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ‘என்சைம்’ (நொதிப் பொருள்)
கண்டுபிடித்துள்ளனர்.அதை ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ரத்தத்தில்
கலந்து விட்டால் அவற்றில் உள்ள சர்க்கரை சத்து நீங்கிவிடும். அதை தொடர்ந்து
அந்த பிரிவு ரத்தமும் ‘ஓ’ பிரிவு ரத்தம் போன்று ஆகிவிடும். அதை நோயாளியின்
உடல் ஏற்றுக் கொள்ளும்.
இந்த தகவலை ஆய்வு குழுவின் தலைவர் விஞ்ஞானி டேவிட் கவான் தெரிவித்துள்ளார். ‘என்சைம்’ கண்டுபிடித்த நிபுணர்கள் குழுவில் இந்திய வம்சாவழி விஞ்ஞானி ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக