வியாழன், 21 நவம்பர், 2013

அமிதாப்புடன் இந்தியில் தனுஷ்! கமல் மகளும் நடிக்கிறார்!

தமிழில் மட்டுமல்லாமல், இந்தியிலும் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார் நடிகர் தனுஷ். தனுஷ் நடிப்பில் சமீபத்தி வெளியான நய்யாண்டி திரைப்படம் சொதப்பிவிட்டாலும், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அநேகன் திரைப்படமும், வேலையில்லா பட்டதாரி திரைப்படமும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் தனுஷ் இந்தி படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்கவிருக்கிறார் என்று கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பரவிவந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். அமிதாப்பச்சன் நடிப்பில் ‘பா’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பல்கியின் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கிறாராம்.

கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் வழக்கம்போல் பல்கி திரைப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவும், ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமும் பணியாற்றுவார்கள் என்று தெரிகிறது. தனுஷுக்கு திடீரென கிடைத்திருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு கால்ஷீட்டும் வாங்கியிருந்தார்களே??? அது என்ன ஆனது என குழப்பத்தில் இருக்கின்றனர் பாலிவுட் திரையுலகினர்.

கருத்துகள் இல்லை: