வியாழன், 21 நவம்பர், 2013

Chennai மனைவியை படம் எடுத்து ப்ளாக் மெயில் செய்த டாக்டர் கைது

A postgraduate dental student was arrested by the Medical College police following a complaint from his wife that he had threatened to post her nude photographs and video clips of their private moments on the Internet.திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மனைவியுடனான படுக்கை யறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார்.  மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மனைவியை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற ஜெயகிருஷ்ணன் நடுரோட்டில் அவரை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அந்த பெண் கூறினார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜெயகிருஷ்ணன், எனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் உங்களது மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகள், நிர்வாண புகைப்படங்களை யு டியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாசரூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: