வியாழன், 21 நவம்பர், 2013

ஏடிஎம்மில் பெண்ணை தாக்கிய குற்றவாளி அடையாளம் தெரிந்தது

பெங்களூர் ஏடிஎம்மில் பெண்ணை தாக்கிய குற்றவாளியின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கர்நாடக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.< வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளியின் புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவனை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். புது தில்லியில் நடைபெறும் காவல்துறை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்  dinamani.com

கருத்துகள் இல்லை: