நித்யா மேனன் படம் ஆண்களுக்கு எதிரானதா? இயக்குனர் பதில்
சென்னை:
மலையாளத்தில் வெளியான ‘22 பிமேல் கோட்டயம் படம் தமிழில்
‘மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் உருவாகிறது. ஸ்ரீபிரியா
இயக்குகிறார். நித்யா மேனன், கோவை சரளா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர்
நடிக்கின்றனர். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவு. அரவிந்த் சங்கர் இசை. ஆண்களுக்கு
எதிரான படமாக இக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறதே என்றதற்கு பதில்
அளித்தார் ஸ்ரீபிரியா.
‘இது ஆண்களுக்கு எதிரான படமா என்கிறார்கள்.
வெளிவரும் பெரும்பாலான படங்களில் ஆண்கள் வில்லன்களாக
சித்தரிக்கப்படுகின்றனர். அந்த படங்களை ஆண்களுக்கு எதிரான படம் என்று சொல்ல
முடியாது. இது ஆண்களுக்கு எதிரான படமல்ல. பெண்ணை மையமாக வைத்து
எடுக்கப்படும் படம். இந்த வேடத்துக்கு நித்யா மேனன் பொருத்தமாக இருப்பார்
என்று ராதிகா என்னிடம் கூறினார். கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்
நித்யா என்றார்.
.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக