திங்கள், 18 நவம்பர், 2013

தாயின் பாடலை ரசித்து கண்ணீர் மல்கிய குழந்தை !

தாயின் பாடல் கேட்டு குழந்தையொன்று கண்ணீர் மல்கிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்த க்கது.பிரிட்டனில் புகழ்பெற்ற பாடகியான போல்ட்ஸ் தனது பாடும் திறமையால் எதிர்பாலினரை ஈர்க்கும் தன்மை கொ ண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவரது பாட லை கேட்டு குழந்தையொன்று உருகி உருகி அழுதது இது வே முதல்முறையாகும். 'உனக்கு எனது பாடலை கேட்கவேண்டும் போல் உள்ளதா? பாடும்போது நீ என்ன செய்கிறாய் என்பதை நான் பார்க்க வேண்டும்' என்று அக்குழந்தையை பார்த்து அவர் கேட்பதும் பின்னர் அந்த பாடலை பாட குழந்தை பாடலைக்கேட்டு உருகி உருகி அழுவதும் குறித்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
சாதாரணமாக ஒரு குழந்தை பசி வந்தால் வீரிட்டு அழுவதுதான் வழமையான செயற்பாடு. ஆனால் 10 மாதமேயான இந்த குழந்தை இரண்டு நிமிடம் இசைக்கப்பட்ட அந்த பாடலைக் கேட்டு உருகி உருகி அழுத காட்சியானது கண்ணை விட்டு நீங்கவில்லை.

இதுவரை 300,000 பேர் இந்த வீடியோக்காட்சிகளை பார்வையிட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது. இது உலகில் மிகவும் சிறிய அழகியதொரு விடயம் எனவும், இந்தக் காட்சி என்னை அதர்ச்சியடைய செய்கிறது எனவும் இவ் வீடியோவை பார்த்த இருவர் கருத்து வெளியிட்டுள்ளனர்.ilankainet.com

கருத்துகள் இல்லை: