திங்கள், 18 நவம்பர், 2013

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திற்கு தடை விதிக்கவேண்டுமாம் ! முலாயம்சிங் யாதவ் . இந்த ஆளை பேசாம ஜூவில கொண்டு போய் விடுங்க !

எடாவா : ''பார்லிமென்டில், ஆங்கிலத்தில் பேச தடை விதிக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் யாதவ் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.உ.பி.,யில் நேற்று நடந்த, இந்தி மொழி பாதுகாப்பு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற, முலாயம் சிங் பேசியதாவது:ஓட்டு கேட்க வரும்போது, இந்தி மொழியில் பேசும் அரசியல் தலைவர்கள், பார்லிமென்டில், ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அந்தந்த தாய்மொழிகளை பேசும் நாடுகள் தான், அனைத்து விதங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.ஆனால், நம் நாட்டின் பார்லிமென்டில், ஆங்கிலம் தான் அதிகமாக பேசப்படுகிறது. பார்லிமென்டில், ஆங்கிலத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்தி மொழியை பேச உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தான், இந்தியை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, முலாயம் சிங் பேசினார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை பார்த்து கெட்டு போய்விட்டார் என்று நினைக்கிறேன் அதனால் தான் இப்படி தவறாக பேசுகிறார் இப்படிதான் சிலோன்ல பெரிய பண்டாரநாயக்கா 56 ல்ல தனி சிங்களம் கொண்டுவந்து இன்றுவரை அந்தகாலத்து சொர்க்கபுரியை நாசமாக்கினார் .


நம் நாட்டின் பார்லிமென்டில், பல மொழிகளை தாய்மொழிகளாக கொண்டவர்கள், எம்.பி.,க்களாக உள்ளனர். வட மாநிலங்கள் தவிர்த்து, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தி மொழி தெரியாது. அதனால் தான், அதிகாரப்பூர்வ மொழியாக, ஆங்கிலம் உள்ளது.இது கூட தெரியாத முலாயம், 'ஆங்கிலத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்தி மொழி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இவரே, இன்னொரு முறை, ஆங்கில மொழி நிகழ்ச்சியில் பங்கேற்றால், ஆங்கிலத்தின் சிறப்புகளை மெச்சத் தயங்க மாட்டார்.இவர் போன்ற, நேரத்திற்கு நேரம், மாற்றிப் பேசும் அரசியல் தலைவர்கள் தான், நம் நாட்டில் அதிகமாக உள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: