புதன், 20 நவம்பர், 2013

பீட்ஸா- 2 வில்லா’: வாந்தி-பேதிக்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல..

20131115138448051661277
‘பீட்ஸா- 2 – வில்லா’ என்ற பெயரி்ல் ஒரு படம் வந்திருக்கிறது.
அது, ‘கோயில்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்றால்,  நமது மனதிற்கு பாஸிட்டிங் வைப்ரேஷன் ஏற்படும், அதுபோல சூனியம், மந்திரம் போன்றவை செய்யக்கூடிய இடத்திற்குச் சென்றாலோ அல்லது  செய்துவைத்துள்ள இடத்தில் இருந்தாலோ நமது மனதில் நெகட்டிவ் வைப்ரேஷன் ஏற்படும்.’  என்ற கருத்தை அறிவியலாக சொல்கிறதாம்.
“அதெல்லாம் உண்மடா மச்சான். ஆனா நீ நம்ப மாட்ட.. பகுத்தறிவுன்னு.. வௌக்கெண்ண நியாயம் பேசுவ.. ” என்று படம் பார்த்து வந்த 4 நண்பர்கள், படம் பாக்காத என்னை பாடாய் படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அந்த நாலுபேரில் இரண்டு பேருக்கு இரண்டு நாளா வயிற்றுப் போக்கு. இன்னும் இரண்டு பேருக்கு வாந்தி. அதுக்குக் காரணம், ஒரே நாளில் ஏகப்பட்ட தீபாவளி பலகாரம் சாப்பிட்டது.

நான் கேட்டேன், “நீங்க நாலுபேரும் ஒண்ணாதான் அந்தப் படத்தை பாத்துட்டு வந்தீங்க.. உங்க நாலுபேருக்கும் பேதியும் வாந்தியும் வந்திருக்கு.. அதுக்குக் காரணம் ‘வில்லா படத்தின் மூலமாக உங்களுக்கு நெகட்டிவ் வைப்ரேஷன் ஆயிடுச்சுன்னு  சொன்ன ஒத்துக்குவீங்களா?” என்றேன்.
நண்பன் பிரசன்னா அவசரமாக சொன்னான், “ஆமான்டா மச்சான்.. நீ சொல்றது உண்மதான். நேத்து என் பிரண்டு ரெண்டு பேரு, அந்தப் படத்த பாத்திருக்கானுங்கடா.. அவனுங்களுக்கு வாந்தி-பேதி வந்து ஆஸ்பிட்டல்லா அட்மிட்’’ என்றான்.
அடப்பாவிகளா?
நமக்கு நம்பிக்கையில்ல..
வாந்தி-பேதிக்கு காரணம் திங்கிற தீனியும், சுகாதாரமற்ற சூழலும் தான்.
Toilet போயிட்டு வந்தா, கையை சோப்புப் போட்டு கழுவாதவர்கள் எல்லாம் ‘பேதி’க்கு பில்லி-சூனியத்தின் மேல் பழி போடுவது போல், ‘வில்லா’ திரைப்படமும் அப்படி ஏதோ ஒரு வைப்ரேஷன் காரணத்தை சொல்லியிக்கும் போல..
கடைசியில.. வரம் கொடுத்த சிவன் தலையிலயே கைய வைச்சக் கதையா..? பில்லி-சூனியத்திற்கே பில்லி-சூனியம் வைச்சிட்டானுங்க என் நண்பர்கள்.
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கடவுள் தொல்லையும் இல்லை. பேய் தொல்லையும் இல்லை.
நம்பிக்கை இருக்கிறவங்க ஜாக்கிரதையா இருந்துக்குங்க..
வாந்தி-பேதி வந்துராமா…
அதாங்க வில்லா பக்கம் போயிடாமா…mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: