திங்கள், 18 நவம்பர், 2013

கோவையில் கவர்ச்சி உடை அணிந்தால் லைசன்ஸ் கிடைக்காதாம் ! பேசாம கோவையை காபுல்ன்னு மாத்துங்க

கோவை:மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவோருக்கு, உடைகளுக்கான கட்டுப்பாடுகளை, கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் விதித்துள்ளது. "மாடர்ன்' உடை என்ற பெயரில், கவர்ச்சியான ஆடை அணிந்து வரும் பெண்களுக்கும், டீ-சர்ட் அணிந்து வரும் ஆண்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு, தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். முதல் கட்டமாக எழுத்துத்தேர்வு எழுதி, "பழகுனர் உரிமம்' பெறுகின்றனர். அதன் பின், 30 நாள் கால அவகாசத்தில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில், "8' என்ற எண்ணை போன்ற வடிவத்தில் வாகனம் ஓட்டி காண்பிக்க வேண்டும். டி சர்ட் போடகூடாத?அடேய் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?சம்பளத்துக்கு ஒரு தாலிபானை வச்சுக்கிட்ட தேவல 
சரியாக வாகனத்தை ஓட்டும்பட்சத்தில், அவருக்கு மோட்டார் வாகன
லைசென்ஸ் வழங்கப்படும்; இல்லாவிட்டால், திரும்பவும் பயிற்சி பெற்று, அதன் பின் வாகனத்தை மோட்டார் வாகன அலுவலர் முன், இயக்கிக் காண்பிக்க வேண்டும். அப்போது தான் லைசென்ஸ் வழங்கப்படும்.தற்போது லைசென்ஸ் பெறுவதற்கு பழகுனர் உரிமம் பெறுதல், வாகனத்தில் "8' போட்டு காண்பித்தல், லைசென்ஸ் பெற போட்டோ எடுத்தல் என்று மூன்று முறை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, லைசென்ஸ் பெறுபவர் கட்டாயமாக செல்ல வேண்டும்.இந்த மூன்று பணிகளுக்காக செல்லும்போதும் ஆண்களாக இருந்தால், சட்டை அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுரிதார் அல்லது சேலை அணிந்து செல்ல வேண்டும்; கவர்ச்சியான உடை அணிந்து செல்லக்கூடாது. தேசிய மோட்டார் வாகனச்சட்டத்தின் அடிப்படையில், "டீ சர்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து லைசென்ஸ் பெற போட்டோக்களில் போஸ் கொடுக்கக்கூடாது' என்ற நடைமுறை ஏற்கனவே இருந்தாலும், தற்போது விதிமுறை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது.அதனால், இதற்கான அறிவிப்புகள், கோவை தெற்கு, வடக்கு, மத்தியம் ஆகிய மூன்று ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அலுவலகத்துக்கு வருகிறோம் என்ற உணர்வு ஒவ்வொருவரிடம் வரவேண்டும். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவோ, வக்கிரமாகவோ, ஆபாசமாகவோ இல்லாத வகையில் உடைகளை அணிந்து வந்தால், வருவோருக்கும் நல்லது; பார்ப்போருக்கும் நல்லது.கவர்ச்சி உடை என்ற பெயரில் சிலர் ஆடைகளை அணிந்து வருவது பார்ப்பவர்களுக்கு ஆபாசத்தை ஏற்படுத்துகிறது. வாகனத்தில் "8' போடும்போது, அதை தூரத்திலிருந்து சிலர் படம் எடுக்கின்றனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.போட்டோ எடுக்கும்போது, கழுத்துவரை தான் எடுக்கிறீர்கள் அதற்காக ஏன் ஆடைகளை பற்றி பேசுகிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ அரசு அலுவலகத்துக்கு லைசென்ஸ் பெறுவதற்காக வருவோர் நிர்ணயிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வரவேண்டும். இந்த உத்தரவை மீறி வேறு ஆடை அணிந்து வருவோருக்கு லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: