ஏடிஎம்
மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரிடம் இருந்த பணம்
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த வீடியோ
காமிராவில் பதிவாகி உள்ளது.
பெங்களூர்
எஸ்.ஜெ. பார் பகுதியில் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை உள்ளே
நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த ஒருவன்,
ஏ.டி.எம். ஷெட்டரை இழுத்து உள்பக்கமாக பூட்டினான். பின்னர்
கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டி ஏதோ மிரட்டினான். அந்த பெண்
மறுத்து தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றதால், ஆத்திரம் அடைந்த
கொள்ளையன் அப்பெண்ணை தான் வைத்திருந்த பையிலிருந்து அரிவாளை எடுத்து
மிரட்டினான். அதற்கும் அந்த பெண் பயப்படாமல் இருந்ததால், அப்பெண்ணை கீழே
தள்ளி சரமாரியாக வெட்டினான். பின்னர் அந்தப் பெண்ணின் பையிலிருந்த
பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பினான். இந்தக்
காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி
உள்ளன. ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே ரத்த துளிகளை கண்ட துப்புரவு
பணியாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில்
அனுமதித்தனர். அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று
வருகிறார். விசாரணையில்
பாதிக்கப்பட்ட பெண் அதே கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் மேலாளர்
ஜோதி என்பது தெரிய வந்தது. பெங்களூர் மாநகர காவல்துறை துணை ஆணையர்
கமல்பான்ட் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் தற்போது
ஓரளவு சுயநினைவு இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில் அவர்
இல்லை. போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் உள்ளனர். அவரிடம் தகவல் பெற
முயற்சித்து வருகின்றனர் என்றார்.nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக