புழல்: இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த
குற்றம் தொடர்பாக கைதாகி, புழல் மத்திய சிறையில் உள்ள, வெளிநாட்டு கைதிகள்,
விலை உயர்ந்த சாக்லெட் மற்றும் சிகரெட் கேட்டு, சிறை அதிகாரிகளுக்கு
அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே, அமெரிக்காவின், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பல், கடந்த அக்., 12ம் தேதி, இந்திய கடல் எல்லைக்குள் வந்தது.
35 பேர்: ஆயுதங்களோடு, உரிய அனுமதியின்றி இருந்த அந்த கப்பல், கடலோர காவல் படையிடம் சிக்கியது. அதில் இருந்த கேப்டன் உட்பட, 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 12 பேர் இந்தியர்கள். அவர்கள், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வெளிநாட்டவர்களை கைது செய்தால், அவர்களை மாநிலத் தலைநகரில் உள்ள சிறையில் அடைக்க வேண்டும் என்ற விதிப்படி, 35 பேரில், எஸ்தானியா நாட்டை சேர்ந்த, 14 பேர், இங்கிலாந்தை சேர்ந்த, ஆறு பேர், உக்ரைன் நாட்டை சேர்ந்த, மூன்று பேர் என, 23 பேர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் அதிர்ச்சி:
அவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் சாக்லெட் மற்றும் சிகரெட் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர். அதனால், சிறை அதிகாரிகளிடம், அவர்கள் நாட்டு தயாரிப்பான சாக்லெட், சிகரெட் ஆகியவற்றை கேட்டு உள்ளனர். ஒரு சாக்லெட், இந்திய ரூபாய் மதிப்பின்படி, 4,900 ரூபாய் என்று கூறப்படுகிறது. சிகரெட்டும் அதே போன்று விலை அதிகம். அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள், சிறை விதிப்படி, தடை செய்யப்பட்ட அந்த பொருட்களை, சிறைக்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள், கைதிகளாக உள்ள கப்பல் ஊழியர்களை அவ்வப்போது, விசாரணை தொடர்பாக வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். கப்பல் பொறியாளருக்கு சிகிச்சை:
சிறையில் உள்ள கப்பல் பொறியாளர் சிடோரென்கோ வெலரிக்கு, 61, இங்குள்ள வெப்பமயமான தட்ப வெப்ப நிலை காரணமாக, அதிக அளவில் வியர்வை வெளியேறியது. மேலும், ரத்த அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து சிறை மருத்துவரின் பரிந்துரைப்படி, அவர், நேற்று முன்தினம் மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், நேற்று பிற்பகல் சிறைக்கு திரும்பினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக