ஞாயிறு, 4 ஜூலை, 2010

அசின்,லங்கையில் இருந்து எனக்குக் கிடைக்கும் ஈமெயில்கள்

இலங்கையில் இருப்பது எனக்கு என் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வையே தருகின்றது. இலங்கையின் சூழல், இங்குள்ள மரங்கள், மலைகள் எல்லாமே எனக்கு கேர ளாவையே ஞாபகப்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இங்குள்ளவர்களின் உபசரிப்பு, அவர்களின் பிரியம் எல்லாமே என் தாய் மண்ணில் இருப்பதைப் போன்ற உணர்வையே எனக்கு ஏற் படுத்துகின்றது.
இலங்கையில் இருந்து எனக்குக் கிடைக்கும் ஈமெயில்கள் எல்லாம் இங்குள்ள மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்குச் சான்று பகர்கின்றன. இலங்கைக்கு நான் வருவது இது இரண்டாவது தடவை. முன்னதாக 2004 இல் இலங்கை வந்தேன்.
கர்ஷனா என்றகாக்க காக்கதிரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் படப்பிடிப்புக்காக இங்கு வந்திருந்தேன். நுவரெலியாவில் படகு வீடொன்றில் படப்பிடிப்பு நடந்தது. ஒருநாள் படப்பிடிப்பின் போது எங்கள் படகு கவிழ்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இங்குள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் அப்படகை டைட்டானிக் என்றும் என்னைரோஸ்என்றும் அழைத்து கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தவிர்த்துப் பார்த்தால், இலங்கை பற்றிய நினைவுகள் பசுமையாக என்னுள் இருக்கின்றன.
நெருக்கடியான சூழ்நிலைகளில் நான் இங்கு வருவதும் துரதிர்ஷ்டமானதுதான் ஆனாலும், அவ்வாறான சூழ்நிலைகளிலும் என் ரசிகர்களின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையாவது ஏற்படுத்த என்னால் முடிந்தால், அதனை ஒரு பெரிய பாக்கியமாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை என்னால் முடிவதும் கலைஞர்களால் முடிவதும் அதுதான்.
பத்திரிகையாளர் மாநாட்டில் சல்மான் கான் சொன்னவற்றுடன் நானும் உடன்படுகின்றேன்.
நாங்கள் கலைஞர்கள். அரசியலை அரசியல் வாதிகளுடன் விட்டுவிட வேண்டும். கலைஞர்களாக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்ய வேண்டும். கலையென்பது மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். அதனை மக்களைப் பிரிக்கப் பயன்படுத்தக் கூடாது. மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவர்கள்தான் கலைஞர்கள். அதனைத் தடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அரசியல் செயற்பாடுகள் கலைஞர்களை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் இங்கு வருகிறார்கள். கடற்படைத் தளபதி வருகின்றார். ஆனால் கலைஞர்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதுதான் புரியவில்லை.

கருத்துகள் இல்லை: