திமுக ஆதரவாளர்களின் உட்கட்சி கருத்து பரிமாறல்கள் வரவேற்கப்பட வேண்டிய உன்னத ஜனநாயக பண்பு! அழுத்தமான கொள்கை சார்ந்த ஒரு கட்சியில்தான் இது சாத்தியமாகும்.
தவறான பாதையில் தலைவர்கள் சென்றாலும் தடுத்து நிறுத்தி திருத்தி வேண்டும் , வெறும் ஜால்றா அடிப்பது மட்டுமே கழக பணியாகாது
சாந்தி நாராயணன் : முதுமை கலைஞரை முடக்கியிருக்கிறது.
மூடநம்பிக்கைகள் திமுகவை முடக்கி விடாமல் இருக்கட்டும்.
திருஷ்டி பேசும் துரைமுருகன்
காவிரி புஷ்கரத்துக்கு பூஜை போடப்போன செயல்தலைவர் மனைவி துர்க்கா
ஆயுதபூசை கொண்டாடும் அன்பில் மகேஷ்
சூரசம்ஹாரத்திற்கு பெரியார் அண்ணா கலைஞர் படத்தோடு சுவரொட்டி அடிக்கிற அனிதா ராதாகிருஷ்ணன்.
திங்கள், 2 நவம்பர், 2026
திமுக தலைவர்களின் பார்ப்பன மயக்கம் - குமுறும் உடன்பிறப்புக்கள்
5 தென்னிந்திய மாநிலங்களுக்கு ரூ.18,534 கோடி.. உ.பி.க்கு மட்டும் ரூ.19,208 கோடி வரிப் பகிர்வு!
minnambalam.com - Mathi : மத்திய அரசு விடுவித்துள்ள வரிப் பகிர்வு நிதியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.18,534 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசம் என்ற ஒரே மாநிலத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வழங்கும் வரிப் பகிர்வு நிதியுடன் கூடுதலாக, அக்டோபர் 31-ந் தேதி ரூ.1,09,019 கோடியை விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 2-வது கூடுதல் தவணை இதுவாகும்.
சனி, 31 அக்டோபர், 2026
Teesta Javed Setalvad — ஒரு “சமூகச் செயற்பாட்டாளர்” மட்டும்தான் ஆனால் பயங்கர பணக்காரி !
![]() |
Sivanesan Rasiah : பல தலைமுறைகளுக்கு முன்பே வேரூன்றியிருந்த,
பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி அமைப்பு ஒன்றின் வீழ்ச்சி...
அமிதாப் பச்சனின் பங்களாவைத் தாண்டி, அந்தச் சாலையில் தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இரண்டு அல்லது மூன்று பங்களாக்கள் மட்டுமே உள்ளன.
அந்தச் சாலையில் பிரம்மாண்டமான ஒரு பங்களா இருக்கிறது. அதன் பெயர் “நிரந்தர்” (Niranter).
இந்தப் பங்களா, அமிதாப் பச்சனின் பங்களாவைவிட மூன்று மடங்கு பெரியது. ஏறத்தாழ மூன்று ஏக்கர் பரப்பளவில் புல்வெளியைக் கொண்டுள்ளது. அளவுக்கு அதிகமான ஆடம்பரத்துடன் அமைந்திருக்கிறது.
வெள்ளி, 30 அக்டோபர், 2026
ஆக நாம இனிமே கண்காணிக்க படுறோம்.
![]() |
குமரிக் கிழவனார் : இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தம்பியை அழைத்திருக்கிறார்கள்.........
பதினாறு வருசமா முகநூலில் எழுதுகிறேன்
இந்த புனைப்பெயரில் எழுதுவது இது ஏழாவது வருடம்.
கூடன்குளம் பிரச்சனையில் ஒன்றிய அரசிற்கு எதிராக எழுதிய போது கவனம் பெற்றேன்
அதை தொடர்ந்து இரண்டாயிரத்தி பதினாறில் பண மதிப்பிழப்பின் போதும் இரண்டாயிரத்தி பதினாறு தேர்தலின் போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுதினேன். இணையம் போலி துறைமுகதிட்டம் கோவளம் துறைமுக திட்டம் இரண்டுக்கு எதிராக தீவிரிமாக எழுதியிருக்கிறேன்
ஓகி புயலின் போது நடந்த தில்லுமுல்லுகள் சாதி சண்டை மூட்டல்கள் பற்றி எழுதியிருக்கிறேன். குமரி மாவட்டத்தில் மதச்சண்டை தூபம் போட்டுகொண்டிருந்த கூட்டத்தை கடுமையாக எழுதி அது கொலை மிரட்டல் வரைக்கும் போயிருக்கிறது. வேறொரு சம்பவத்தில் சுயசாதி சங்க ரவுடிகள் இரவு வீடு வரை வந்து அப்பாவை மிரட்ட பார்த்து அவரிடம் வாங்கி கட்டி கொண்டு போனார்கள்.....
சவுக்குசங்கர் ... பாப்பா மாலதிக்கு இடையில் என்ன உறவு?
![]() |
Barani Pillai : சவுக்கு... பாப்பா மாலதி... காருக்குள் நடந்தை போட்டுடைத்த டிரைவர்...
சவுக்கு சங்கருக்கு அவருடன் பயணிக்கும் மாலதிக்கு இடையில் நடந்த சம்பவம் என்ன என்பதை , சவுக்கு சங்கருக்கு சுமார் ஒரு வருடமாக டிரைவராக இருந்த கோபிநாத் என்பவர் போட்டுடைத்து உள்ளார், அவர் பேசிய விவரங்களை கேட்டவர்கள், சவுக்கு சங்கர் மாலதி இருவரும் இவ்வளவு கேவலமானவர்களா.? என்று காறி உமிழும் வகையில் உள்ளது என இந்த டிரைவர் பேசும் வீடியோவை பார்த்த பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக சவுக்கு சங்கரை பேட்டி எடுக்கும் மாலதி, அவரை சார் அது அப்படி இல்லை சார், இது இப்படி இல்லை சார் என மூச்சுக்கு முந்நூறு தடவை சார் சார் என்று அழைப்பார், அதே போன்று மாலதியை சொல்லுங்க மாலதி, என அவங்க , இவங்க என்று தான் மாலதியை சவுக்கு சங்கர் அழைப்பார்,
அன்பில் மகேஷ் - பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா! மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு – திடுக்கிட வைக்கும் பின்னணி என்ன?
![]() |
Barani Pillai : அன்பில் மகேஷ் (48)லஞ்ச வழக்கு: பிரபலபெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா (36)வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு – திடுக்கிட வைக்கும் பின்னணி என்ன?
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி முதல் ரூ. 400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் [திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் அதிரடித் திருப்பமாக, சென்னை பெருங்குடியில் உள்ள 'ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா என்பவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வியாழன், 29 அக்டோபர், 2026
BanTheScan:கலையரசன் கைது எழுப்பும் இரு பிரச்சினை
மின்னம்பலம் - ரவிக்குமார் : பொருளாதார அறிஞர் கலையரசன் கைது செய்யப்பட்டது அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறாகப் பதிவிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கினால் நேர்ந்தது எனத் தெரிகிறது. காவல்துறையினர் அந்தக் கணக்கில் இருந்த அவரது புகைப்படத்தை ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப்’ ( Facial Recognition Technology – FRT ) பயன்படுத்தி அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.
இதில் பின்வரும் இரண்டு பிரச்சினைகளை நாம் பார்க்கிறோம்.
ஒன்று: முக அங்கீகாரத் தொழில் நுட்பத்தைக் காவல்துறை பயன்படுத்துவது நமது அந்தரங்க உரிமையைப் பறிக்கிறதா?
BC OBC மக்கள் இந்த தனித்தொகுதிகளுக்கு எதிராக புரட்சி செய்திருக்க வேண்டும்.
![]() |
Ancy Bency : தற்போதைய உடனடி தேவை BC. OBC மக்களின் ஒற்றுமை.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட குறைந்தபட்ச வயது வரம்பு 25 ஆகும்.
1962 இல் ஒருவருக்கு 25 வயது ஆகி இருந்தால் இன்று அவரின் வயது 89 ஆகி இருக்கும்,
ஒரு சராசரி இந்தியனின் ஆயுட்காலம் என்பது 60 வயதாகும்,
தனது வாழ்நாள் முழுக்க தான் பிறந்த மண்ணின் தேர்தல் ஜனநாயகத்தில் ஒரு மனிதனால் பங்கெடுக்க முடியாவிட்டால் அம்மனிதன் அந்நாட்டின் இரண்டாம் தர குடிமகன் ஆவான்.
நினைத்துப்பாருங்கள் இந்த நாட்டுக்கு நம்முடைய முன்னோர்கள் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள்,
அன்று அவர்கள் நினைத்திருப்பார்களா நாம் சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து உயிர் விடப் போகிறோம்,
இஸ்ரேல் தேர்தல் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! ஆட்சி அமைப்பதில் இழுபறி
பி பி சி தமிழ் :இஸ்ரேல் தேர்தல்: எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது அரசாங்கம் எப்படி அமைக்கப்படுகிறது?
கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து அந்நாட்டில் கூட்டணி அரசுகளே அமைந்து வந்துள்ளன. ஆனால், அடுத்த அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடம் பெறுவாரா?
ஹமாஸ் தலைமையிலான தாக்குதல், 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தலுக்காக, அக்டோபர் 27ஆம் தேதி இஸ்ரேல் வாக்களித்தது.
புதன், 28 அக்டோபர், 2026
தவெக ஆட்சியில் 50 கைதிகள் தப்பி சென்றுள்ளனர்; மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, போலீசுக்கும் பாதுகாப்பு இல்லை
dinakaran.com -MuthuKumar : சென்னை: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:
தேனி மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து 17 பேர் வந்து தப்பி ஓடி இருக்காங்க. இந்த ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, போலீசுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுவரைக்கும் தவெக ஆட்சியில 50 பேர் சிறைக்காவலில் இருந்து தப்பித்திருக்கிறாங்கன்னா என்ன நிர்வாகம் செய்கிறார் தமிழ்நாட்டுடைய முதல்வர்? இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில இதுவரைக்கும் நடந்ததே கிடையாது.
Shoba sakthi ; தமிழைப் பொறுத்தவரை எனது மாதக்கணக்கான உழைப்புக்குக் கிடைத்தவை சில சிகரெட்டுகளும் சுவாசப்பையில் கோளாறுமே!
![]() |
Shoba Sakthi : புத்தகத் தடுப்பும் யாவாரமும் !
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தால் தமிழ் எழுத்தாளர்களின் சில புத்தகப் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, எழுத்தாளர்களின் கூட்டறிக்கை ஒன்று இலங்கை சனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சுங்கத் திணைக்களத்திற்கும் ஊடகங்களுக்கும் நாளை அனுப்பப்படயிருக்கிறது.
இதையொட்டிச் சமூக வலைத்தளங்களில் ஒரு குத்துமதிப்பான கருத்தாடல் நிகழ்வதைக் கண்டேன். அதாவது இவையெல்லாம் புத்தக வியாபாரத்திற்காக எழுத்தாளர்களால் செய்யப்படும் சூழ்ச்சிகளாம். தமிழில் புத்தகம் எழுதிச் செல்வத்தில் கொழிக்கலாம் என்றொரு கருத்தும் சில அப்பாவி முகநூலர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.
செவ்வாய், 27 அக்டோபர், 2026
அன்பில் மகேஷை ஏன் குறிவைக்கிறார்கள்? பாஜகவுக்கு செய்த 5 தவறுகள்.. ஜெயலலிதா சொன்னது என்னாச்சு?
tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் அன்பில் மகேஷ் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மாவட்டந்தோறும் மாடல் ஸ்கூல்கள் அதாவது மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,320 மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அன்பில் மகேஷூக்கு கிடைத்த வெற்றி" என்று பாராட்டு தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் செந்தில்வேல்
தன்னாட்சி என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அன்பில் மகேஷ் ஏன் குறிவைக்கப்படுகிறார்? மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அவர் எதிர்த்தது முக்கியமான காரணம்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரடியாகவே அன்பில் மகேஷ் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
ஜெயிலில் அன்பில் மகேஷ்.. அலட்டிக் கொள்ளாத திமுக.. அன்று நடந்த ‘அந்த’ சம்பவங்கள்!
![]() |
minnambalam.com : அன்பில் மகேஷ் விவகாரத்துல தொடக்கம் முதலே ஒவ்வொரு மூவ்ஸையும் நாம அப்டேட் செஞ்சுகிட்டே வந்தோம்.. நேத்து அன்பில் மகேஷ் அரெஸ்ட்-க்கு பிறகும் கூட கடைசி நிமிட பேச்சுவார்த்தைகளை பத்தியும் டீட்டெயிலா சொல்லி இருந்தோம்..
அன்பில் மகேஷை கைது செஞ்ச போலீஸ், அவரை கோர்ட்டில ஆஜர்படுத்துறதுக்கு முன்னாடி ஒரே களேபரமாகிடுச்சுங்க ப்ரோ.. ”கோர்ட்ல நீதிபதி வெயிட் பண்றாரு.. ஆனா அன்பில் மகேஷை அங்கே இங்கேன்னு அலைகழிச்சுகிட்டு இருக்கீங்களா?”ன்னு ரொம்பவே டென்ஷனாகி போலீசுடன் சண்டை போட்டாரு திமுக மாஜி அமைச்சர் சேகர்பாபு..
அதுக்கு பிறகு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னாடி அன்பில் மகேஷை ஆஜர்படுத்த, ஜெயிலுக்கு அனுப்ப கூடாதுன்னு அவர் தரப்புல வில்சன் வாதிட்டாரு.. அரசு தரப்புல இதுக்கு கடுமையாக எதிர்க்க, கடைசியாக அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ப்ரோ..
திங்கள், 26 அக்டோபர், 2026
அன்பில் மகேஷ் பொய்யாமொழி: என் கைதுக்கு இதுதான் காரணம்!
|minnamblam Kavi : முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக என்னை கைது செய்துள்ளனர் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
BJP, DMK, ADMK, PMK, Congress, TVK, Communist என அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் தலித் மைய அரசியல்தான் செய்கிறார்கள்
![]() |
Ancy Bency : நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர் இல்லாத கூட்டமைப்பு எப்படி காலத்தின் கட்டாயமோ அதே போல் தலித் அல்லாதோர் கூட்டமைப்பும் காலத்தின் கட்டாயமே.
அனைத்து சமுதாய கூட்டமைப்பு என்று Dr.ராமதாஸ் சங்கம் துவங்கினால் அதை தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்று rebrand செய்றானுங்க,
இல்ல எனக்கு புரியல, ஏன் எந்த அமைப்பு துவங்கினாலும் தலித் இல்லாம பண்ண கூடாதா?
கல்யாணத்துக்கு போனா மாப்பிள்ளையா இருக்கணும், சாவுக்கு போனா பிணமாக இருக்கணும் என்கிற சைக்கோ மனநிலை கொண்ட கும்பலாக தலித்திய அரசியல் உருவாகியுள்ளது.
DICCI என்று ஒரு அமைப்பு உள்ளது,
Dalit Indian Chamber of commerce, இதில் ஆசியாவிலேயே பெரிய பெரிய பணக்கார தலித்துகள் எல்லாம் இருக்கானுங்க, இந்த அமைப்பில் தலித் மட்டும் தான் உறுப்பினர் ஆக முடியும்,
நீதிபதி ஒய்.வி. சந்திரசூட். : அப்போது நாங்கள் கோழைகளாக இருந்தோம்”
Vijayasankar Ramachandran : யாரென்று தெரிகிறதா?
பாபர் மசூதி வழக்கில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு. வழக்கமான உச்ச நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறாக மூன்று விஷயங்கள் நடந்தன.
1. தீர்ப்பை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அது எழுதப்பட்ட விதத்தை வைத்து தீர்ப்பை எழுதியவர தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்தான் எழுதினார் என்று சட்ட வல்லுனர்கள் அன்றே கணித்துவிட்டனர்.
2. எழுதியவரேதான் தீர்ப்பை நீதிமன்றத்தில் வாசிப்பார். அப்போது வாசித்தவர் நீதிபதி கோகோய். (பிறகு மேலவை உறுப்பினர் என்கிற பரிசைப் பெற்றவர்)
கனிமொழி எம்.பி : அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?”
kalaignarseithigal.com ; தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாகி வரும் நிலையில் குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் கடும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாகும் சம்பவத்தால் பெற்றோர் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.
சனி, 24 அக்டோபர், 2026
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை; பரபரக்கும் தமிழக அரசியல்!
நக்கீரன் : தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிகளுக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளன.
காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் : “இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை”
hindutamil.in -அ.அருள்தாசன் : நெல்லை: “தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துவிடவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்பது எங்களது கனவு. அதற்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்” என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளி, 23 அக்டோபர், 2026
தமிழகத்துக்கு படகு மூலம் வந்த 4 இலங்கையர்கள் க்யூ பிரிவு போலீஸார் கைது
![]() |
இந்து தமிழ் : சென்னை: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் வந்த இலங்கை நபர்கள் மூவர் உட்பட 4 பேரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையை நோக்கி வந்த பைபர் படகை க்யூ பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.
படகில் ஓட்டுநர் ராமேசுவரத்தைச் சேர்ந்த முத்துராஜா (44), இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் (34), முகமது கான் (32), முகமது ஆசிக் (25) ஆகிய 4 பேர் இருந்தனர். அவர்களிடம் க்யூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன.








