வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

Image 1611226

 தினமலர் :சென்னை: தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, எந்த வகை கார் வழங்கலாம் என தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும்; தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று முன்தினம் முதல்வர் விஜய் அறிவித்தார்.


முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு உகந்த கார்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். தலைமை செயலகத்திற்கு நேற்று மஹிந்திரா நிறுவனத்தின், 'எக்ஸ்.யு.வி., 7 எக்ஸ்.ஓ., - ஸ்கார்பியோ - ஸ்கார்பியோ என்., - எக்ஸ்.யு.வி., 3 எக்ஸ்.ஓ., - பொலிரோ - பொலிரோ நியோ' உட்பட ஆறு வகை கார்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கருத்துகள் இல்லை: