![]() |
சாவித்திரி கண்ணன் : விளக்கெண்ணை போல ஒரு விளக்கம்!
கடைந்தெடுத்த ஒரு மூடரா, அமைச்சரென கல்வித் துறையை நிர்வகிக்கிறார் !
நம்ப முடியவில்லை!
அனுப்பப்பட்ட அறிக்கை கல்வி வளாகத்தின் ஒழுங்கமைவு சம்பந்தப்பட்டதாம்!
அதில் தவறுதலாக சில வாசகங்கள் இடம் பெற்றுவிட்டதாம்…!
அதை அவர்களே உணர்ந்து வாபஸ் வாங்கிவிட்டார்களாம்..!
அதிகாரிகள் தந்த விளக்கத்தை அப்படியே எடுத்து வந்து அவையில் வாசிக்கிறார், அமைச்சர்!
ஆக, இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்ட அதிகாரியிடம் அமைச்சர் விசாரணை கூட மேற்கொள்ளவில்லை.
கல்வித்துறைக்கு அப்பாற்பட்ட அரசியல் உள் நோக்கங்கள் அந்த அறிக்கையில் உள்ளதை கண்டறியும் அறிவு கூட இல்லாத ஒருவர் தாம் நமக்கு கல்வி அமைச்சராக வாய்த்திருக்கிறார்!
எனக்கென்ன ஆச்சரியம் என்றால், முதலமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார், ஒரு கல்வித் துறை அதிகாரி.
தமிழ்நாடு கல்வித் துறை இணை இயக்குனர் சிந்தியா செல்வியின் சுற்றறிக்கை கல்வித் துறை சம்பந்தப்பட்டதல்ல, அது கல்வித் துறை பொறுப்பையும் கடந்த அரசியல் அணுகுமுறை தொடர்பானதாகும்.
அதுவும் இடதுசாரி இயக்க மாணவர்கள், காக்ரோச் ஜனதா மாணவர்கள் அமைப்பை மட்டும் டார்கெட் செய்து, வலதுசாரி அமைப்புகளின் மாணவர் சங்கங்களை தவிர்த்திருப்பதானது இந்த கல்வித் துறை அதிகாரியின் அரசியல் உள் நோக்கத்தை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துகிறது.
இந்த விபரீத அறிக்கையின் விளைவை விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் காங்கிரஸ் சார்பில் கல்வி அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு.
ஜனநாயகச் செயல்பாடுகளை துச்சமாக கருதும் இத்தகைய கொள்கை சார்ந்த ஒரு அரசியல் அணுகுமுறையை மேற்கொள்ளும் அதிகாரம் கல்வித் துறை இணை இயக்குனருக்கு அறவே கிடையாது.
கல்வித்துறை அதிகாரியானவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆசிரியர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவது, தேர்வு நடத்துதல் ஆகிய கல்வித் துறை விவகாரங்களுக்கு தான் பொறுப்பாக முடியும்!
சட்டம், ஒழுங்கு என்பது முதலமைச்சர் விஜய் சம்பந்தப்பட்ட துறையாகும். தன்னையே 'ஓவர்டேக்' செய்துள்ள கல்வித் துறை அதிகாரி மீது முதல்வரின் நடவடிக்கை என்ன?
இதில் முதலமைச்சரின் நடவடிக்கை இல்லையென்றால், அதிகாரிகள் ராஜ்ஜியத்தில் தமிழ்நாடுள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகிறது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக