சனி, 11 ஜூலை, 2026

ஜெய்ப்பூர் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா தற்கொலை ! பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றோரும் செய்த தவறு

 Yasmin Nihar : ஜெய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் கடந்த நவம்பர் 2025 ல் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா உயிரிழந்த சம்பவம் ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் உலுக்குகிறது.
கடந்த சில நாட்களாக வெளியான புதிய CCTV காட்சிகள், இந்த வழக்கில் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அமைராவின் பெற்றோர், தொடர்ச்சியான bullying, ஆசிரியர்களால் தனது மகளின் புகார்கள் புறக்கணிக்கப்பட்டது, மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் இவையெல்லாம் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
அவள் தினமும் கதறி அழுது ஆசிரியையிடம் உதவி கேட்டபோது, ஆசிரியை மொபைலில் ஸ்க்ரோல் செய்தபடி அலட்சியமாக திருப்பி அனுப்பினாள்! இறந்த நாளிலும் அந்த குழந்தை பலமுறை ஓடி வந்து கெஞ்சியும், அந்த பயங்கர ஆசிரியை மொபைலை விட்டு தலையை தூக்கக்கூட இல்லை!


மேலும், CBSE ஆய்வில் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள், Anti-Bullying அமைப்பு, CCTV கண்காணிப்பு, உயரமான தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நடந்த இடம் தடயவியல் ஆய்வுக்கு முன்பே சுத்தம் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

அமைராவின் குடும்பத்தினர், விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்றும், பல முறை விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டதாகவும், முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மீதும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

ஒரு பள்ளியின் முதல் பொறுப்பு கல்வி மட்டுமல்ல; குழந்தையின் உயிரையும், மனநலத்தையும் பாதுகாப்பதே.
எந்தக் குழந்தையும் "என்னை யாரும் கேட்கவில்லை" என்ற உணர்வோடு வாழக்கூடாது. Bullying என்பது சாதாரண விளையாட்டு அல்ல; அது ஒரு குழந்தையின் வாழ்க்கையையே சிதைக்கக்கூடிய கொடுமை.
இந்த வழக்கில் உண்மை எதுவாக இருந்தாலும், அது வெளிச்சத்திற்கு வர வேண்டும். சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அமைராவிற்கு நீதி வேண்டும்.




கருத்துகள் இல்லை: