செவ்வாய், 7 ஜூலை, 2026

லெனின் 1918ல் கட்டாய பறிமுதலில் ஆரம்பித்து குலாக் முகாம்களையும் கேள்வியே கேட்காமல் சுட்டுக்கொல்லும் செக்கா போலிசையும்தான் உருவாக்கினார்

May be an image of map and text Chandru R :  பண்ணையடிமைகளுக்கு 1,இடம்பெயரும் உரிமை இல்லை ,நிலத்துடன் பிணைக்கபட்டவர்கள், 2உயிர்வாழ மட்டுமே உணவு, 3குடிசையை சுற்றி தோட்டம் இவைதான்  கூட்டுப்பண்ணை விவசாயிகளுக்கு ரசியாவிலும் சீனாவிலும் வழங்கப்பட்ட உரிமைகள்.
இதுதான்  நிலவுடமை உற்பத்திமுறையிலும் பண்ணையடிமைகளுக்கு  கொடுக்கபட்ட  உரிமைகள் ஆகும்.
நிலபிரபு சில நேரங்களில் கோபபட்டாலும் சிலநேரம் கருணை காட்டுவான் ,ஆனால் சீனாவிலும் ரசியாவிலும் எப்போதும் உளவு போலிசின் கண்காணிப்பில்  சுதந்திரமாக மூச்சுக்கூட விடமுடியாது விட்டால் மரணம் அல்லது குலாக் முகாம்,
ஆனால் ஒன்று மருத்துவமும் கல்வியும் இலவசமாக  கிடைத்தன மருத்துவம் இலவசமாகவே கொடுத்தாக வேண்டும் ஏனெனில் பணம் கொடுத்த அவர்களால் வாங்க முடியாது, நோய் தாக்கினால் உற்பத்தி தேங்கி கம்யூனிச எஜமான்கள் சொகுசாக வாழமுடியாது.


இலவச கல்வியை கொடுக்காவிட்டால் நகர்புற இயக்க கொத்தடிமைகள் எங்கே கிடைப்பார்கள் அதற்காக இலவசக்கல்வி எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளும்போது  எதைவைத்து கல்வியையையும் மருத்துவத்தையும் அவர்கள் பெறுவார்கள்.
சரி நம் புரட்சி போராளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி  1917ல்  நிலம் தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கியபின் 1921மார்ச்சில்  லெனின் மீண்டும்  புதிய பொருளாதார கொள்கையையும் சந்தை பொருளாதாரத்தையும்  கொண்டு வந்தார்? 
 இதற்கு மட்டும் தெளிவாக பதில் சொல்லி விட்டால் நீங்கள்தான் உண்மையான புரட்சிப்புளிகள்.ரொம்ப புளித்து விடபோகிறீர்கள்.
ஏஐயின் உதவியுடன் லெனினின் புதிய பொருளாதார கொள்கை என்னவென்ற விளக்கபடம் உருவாக்கபட்டுள்ளது,நன்றாக பாருங்கள் போட்டோ மீது கிளிக் செய்யுங்கள் பெரிதாக தெரியும்.
  இந்த படத்தை பார்த்தாலே 1921க்கு முன்னால் தனது அடாவடி செயலால் நாட்டையே சுடுகாடாக்கி  பாடம்கற்று லெனின் இக்கொள்கைக்கு அதாவது தவிர்க்கமுடியாமல் முதலாளியத்துக்கு மாறியதுதான் புதிய பொருளாதார கொள்கை.
1918ல் கட்டாய பறிமுதலில் ஆரம்பித்து குலாக் முகாம்களையும் கேள்வியே கேட்காமல் சுட்டுக்கொல்லும்  செக்கா போலிசையும் உருவாக்கியும் லெனின் தோற்றுப்போனதின் விளைவே புதிய பொருளாதார கொள்கை,

கருத்துகள் இல்லை: