tamil.filmibeat.com Karunanithi Vikraman : சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர்.
குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின.
மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
இவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ.
ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார்.
அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
ஒரே வருடத்தில் 10 படங்கள்: 90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், “மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார்.
இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார்.
தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
திருமணம்: இதற்கிடையே இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பூ. அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
குஷ்பூவும், சுந்தர்.சியும் தங்களது காதல் வாழ்க்கையை புரிந்தலுடன் நகர்த்தி செல்கின்றனர். இந்தச் சூழலில் அன்பே சிவம் படத்தின் காரணமாக தனது மகளுக்கு நேர்ந்த நல்ல விஷயம் குறித்து சுந்தர்.சி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
அதாவது அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்தான் சுந்தர்.சி ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.
என்ன நடந்தது?: சுந்தர்.சி அளித்த அந்தப் பேட்டியில், “அன்பே சிவம் படம் வெளியானபோது அது கமர்ஷியல் ரீதியாக ஹிட் ஆகவில்லை.
இருந்தாலும் கமல் சார் என்னிடம், ‘நாம் நல்ல விஷயம் செய்திருக்கிறோம். நமக்கு நல்லதுதான் நடக்கும்’ என்று கூறினார்.
அந்த சமயத்தில் எனது மகளுக்கு சென்னையில் ரொம்பவே ஃபேமஸான பள்ளியில் சீட் கேட்க சென்றிருந்தோம். அடுத்த மாதம் பள்ளி என்றால் அதற்கு முதல் மாதம்தான் சென்றிருந்தோம்.
அன்பே சிவம்: எங்களை பார்த்த அங்கு வேலை செய்த ஒருவர், என்ன சார் அடுத்த மாத சீட்டுக்கு இப்போ வந்திருக்கீங்க கண்டிப்பா சீட் கிடைக்காது; இருந்தாலும் பள்ளி முதல்வரை பார்த்துட்டு போங்க என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அந்த பள்ளி முதல்வர் வட மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு எங்களை யார் என்று தெரியவில்லை.
நாங்கள் சினிமாக்காரர்கள் என்று தெரிந்ததும்; ஃபார்மாலிட்டிக்கு சினிமா பற்றி பேசினார். அப்போது ஏன் தமிழில் நல்ல படங்கள் அடிக்கடி வருவதில்லை. எப்போதாவதுதான் வருகிறது.
சமீபத்தில் அன்பே சிவம் படம் பார்த்தேன். அதுமாதிரியான படங்கள் அதிகம் வர வேண்டும் என்று சொன்னார். உடனே குஷ்பூ அவரிடம், ‘அந்த அன்பே சிவம் படத்தின் இயக்குநர் இவர்தான்’ என்று என்னை காண்பித்து சொன்னார்.
உடனே ஆச்சரியமடைந்த அந்த முதல்வர், என்னது நீங்கள்தான் அந்தப் படத்தின் இயக்குநரா. அன்பே சிவம் படத்தின் இயக்குநருக்கு எப்படி சீட் இல்லை என்று சொல்ல முடியும் என கூறி உடனே எனது மகளுக்கு அந்தப் பள்ளியில் சீட் கொடுத்தார்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக